Q: கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்கும்போது வாழ்க்கை முறை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
வெவ்வேறு கருத்தடை முறைகள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவையாக இருக்கும். உங்கள் வேலை நேரம், உறவு நிலை, உடல்நலத் தேவைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவை உங்களுக்கு ஏற்ற கருத்தடை முறையைத் தீர்மானிக்க உதவுகின்றன.
Q: ஒரு கருத்தடை முறையைத் தேர்வு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் யாவை?
நீங்கள் பின்வருவனவற்றைப் பற்றி சிந்திக்க விரும்பலாம்:
கர்ப்பத்தடுப்பு பாதுகாப்பை எவ்வளவு காலத்திற்கு பெற வேண்டும் (தினசரி, மாதாந்தம் அல்லது நீண்டகாலம்)
ஹோர்மோன் கொண்ட முறைகளையா அல்லது ஹோர்மோன் இல்லாத முறைகளையா விரும்புகிறீர்கள்.
மருத்துவ நடைமுறைகள் அல்லது செயல்முறைகளுடன் நீங்கள் எவ்வளவு சௌகரியமாக இருக்கிறீர்கள்.
ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் மற்றும் உங்கள் உடல்நலப் பிரச்சனைகள்
எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்கத் திட்டமிடுகிறீர்களா என்பதைக் கருத்தில் கொள்ளுதல்
Q: குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ஒரு முறையை தெரிவு செய்ய விரும்பினால் என்ன செய்யலாம்?
உள்வைப்புகள்(Implant) அல்லது கருப்பை உள்ளக கருத்தடை சாதனம்(IUD) போன்ற நீண்டகால கருத்தடை முறைகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஒருமுறை பொருத்தப்பட்ட பிறகு, அவை தினசரி கவனம் தேவையில்லாமல் பல ஆண்டுகள் பாதுகாப்பை வழங்குகின்றன.
Q: எனக்கு அதிக கட்டுப்பாடும் நெகிழ்வுத்தன்மையும் வேண்டும் என்றால் என்ன செய்வது?
கருத்தடை மாத்திரைகள் அல்லது ஆணுறை போன்ற குறுகியகால முறைகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். இவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப எளிதாகத் தொடங்கவோ நிறுத்தவோ முடியும்.
Q: ஹோர்மோன் முறைகளை பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு ஏதேனும் தேர்வு முறைகள் உள்ளதா?
ஆம். செப்பு கருப்பையக சாதனங்கள்(Copper IUD) மற்றும் ஆணுறை ஆகியவை ஹோர்மோன் இல்லாத கருத்தடை முறைகளாகும். சரியாகப் பயன்படுத்தப்படும் போது இவை பயனுள்ள மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தேர்வுகளாக உள்ளன.
Q: நான் பின்னர் கருத்தடை முறையை மாற்ற முடியுமா?
ஆம். காலப்போக்கில் உங்கள் கருத்தடைத் தேவைகள் மாறக்கூடும். சுகாதார நிபுணரின் ஆலோசனையுடன் நீங்கள் பாதுகாப்பாக ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு மாறலாம்.
இரகசியமான ஆலோசனைக்கு Bloom by FPA Sri Lankaக்கு அழைக்கவும்:
Q: கருத்தடை முறையைத் தேர்வு செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்ன?
அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரேயொரு “சிறந்த” கருத்தடை முறை என்று எதுவும் இல்லை. உங்கள் உடல்நிலை, வாழ்க்கை முறை மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கும் பொருத்தமானதே சிறந்த தேர்வாகும்.