1953 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் (FPA ஸ்ரீலங்கா), இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்கான உறுதியான மற்றும் முன்னோடியான ஆதரவாளராக திகழ்கின்றது. 70 ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம்(FPASL), சமூகங்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதில் திறமையான மற்றும் பரந்த ஒரு நிறுவனமாக பரிணமித்துள்ளது.
FPA ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பரந்த அனுபவமானது, மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்ட பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது. குடும்பத் திட்டமிடல் மற்றும் கருத்தடை, பெண்கள் பராமரிப்பு, மகப்பேற்று சேவைகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி, பாலினம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, ஆலோசனை மற்றும் ஈடுபாடு உள்ளிட்ட முக்கிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார களங்களில் எமது நிபுணத்துவம் பரவியுள்ளது.
பல்வேறு விதமான மக்களின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பரந்த சேவைகளை வழங்க எமது நிபுணர்களின் குழு சிறந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
அனைவருக்குமான உரிமை என்பதன் அடிப்படையில் பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவைகளை வழங்குவதன் முன்னோடியாக இருத்தல்.
பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார உரிமைகளுக்காக பரிந்து பேசுவதின் மூலம் தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உறவுகளை செழிப்பாக்கல். அத்துடன், நிலைத்திருக்கும் தன்மை மற்றும் தன்னார்வ சேவையை பேணும் அதேவேளை, சேவைகளை வழங்கல்.