கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? அதற்கும் HPV க்கும் இடையிலான சம்பந்தம் என்ன?
கருப்பை வாயின் புறணியில்(யோனியிலிருந்து கருப்பையின் நுழைவாயில்) உள்ள செல்கள் வீரியம் மிக்க (அதாவது தீங்கு விளைவிக்கும்) வழியில் மாறும்போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முதன்மையான காரணம் மனித பாப்பிலோமா வைரஸ் (human papillomavirus -HPV) ஆகும். HPV வைரஸில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. HPV முக்கியமாக தோலோடு தோல் பிறப்புறுப்பு தொடர்புபடுத்தல் உட்பட பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. இது மிகவும் பொதுவானது. பெரும்பாலாக பாலியல் ரீதியாக ஆர்வமான மக்கள் சில வகையான HPV ஐ தங்கள் வாழ்க்கையில் பெறுவார்கள். இது பாலினம் அல்லது பாலியல் நிலையைப் பொருட்படுத்தாமல் ஏற்படக்கூடியது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய கருவிகள் தடுப்பூசி மற்றும் திரையிடல் சோதனைகள் ஆகும்.
9-14 வயதுடைய அனைத்து இளைஞர்களும் - அவர்களின் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் - HPV தடுப்பூசியைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் யார் வேண்டுமானாலும் HPV ஐ காவிச் செல்லலாம் / பரப்பலாம்.
பெரியவர்களுக்கு வழக்கமான கர்ப்பப்பை வாய் பரிசோதனையும் பெரிதளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
இவற்றிற்கு மேலதிகமாக, அதிகரித்த ஆணுறை பயன்பாடு HPV பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் - அத்துடன் இது பிற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) மற்றும் HIV பரவ லின் அபாயத்தையும் குறைக்கும்.
கர்ப்பப்பை வாய் திரையிடல் சோதனை எவ்வாறு செயல்படுகிறது? அது வலியை ஏற்படுத்துமா?
இந்த செயல்முறை பொதுவாக முழங்கால்களை விரித்து சாதாரணமாக படுத்துக்கொள்வதைத் தொடர்ந்து ஒரு சுகாதார நிபுணர் ஒரு உடற்கூற்று உட்காட்டி(speculum) எனப்படும் ஒரு கருவியைப் பயன்படுத்தி யோனியில் உட்செலுத்தி அவதானிக்கப்படுகிறது. யோனியைத் திறக்க பொதுவாக சில மருத்துவ திரவங்களின் உதவியுடன் இது மேற்கொள்ளப்படும்.
இந்த முழு செயல்முறைக்கும் சில நிமிடங்கள் மட்டுமே வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனையின் போது சிலர் சில அசௌகரியங்களை அனுபவிக்கலாம், ஆனால் அது காயப்படுத்தக்கூடாது. நீங்கள் பதட்டமாக இருந்தால், உங்கள் சுகாதார நிபுணருக்கு தெரியப்படுத்துங்கள் - எனவே அவர்கள் ஒரு சிறிய உடற்கூற்று உட்காட்டி(speculum) அல்லது அதிக மருத்துவ திரவத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஓய்வெடுக்க உதவும் சில சுவாச பயிற்சிகளையும் முயற்சி செய்யலாம்.
உங்கள் திரையிடல் சோதனை முடிந்த பிறகு லேசான சிறிய இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது அதிகளவிலோ அல்லது வேதனையாகவோ இருந்தால், நீங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முக்கிய அறிகுறி அசாதாரண யோனி இரத்தப்போக்கு ஆகும் - இது உடலுறவின் போது / அதற்குப் பிறகு, மாதவிடாய் காலங்களுக்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு ஆகியவற்றைக் குறிக்கலாம். இந்த இரத்தப்போக்கு ஏனைய காரணங்களுக்காகவும் நிகழலாம், எனவே அது எதனால் ஏற்படுகிறது என்பதை தீர்மானிக்க மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
உடலுறவின் போது வலி மற்றும் அசௌகரியம், வழக்கத்திற்கு மாறான யோனி வெளியேற்றம், உங்கள் கீழ் முதுகு அல்லது இடுப்பில் வலி, மலச்சிக்கல், கழிப்பறையை அடிக்கடி பயன்படுத்துதல், உங்கள் சிறுநீரில் இரத்தம் வெளியேறல் அல்லது உங்கள் குடல் / சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை இழத்தல் ஆகியவை பிற அறிகுறிகளில் அடங்கும் (ஆனால் இவை மட்டுமே அல்ல).
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை அனுபவிக்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், அதனால்தான் நீங்கள் ஆரோக்கியமாக உணர்ந்தாலும் கூட வழக்கமான திரையிடல் சோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
புற்றுநோய்க்கு முந்தைய கர்ப்பப்பை வாய் புண்கள் குணப்படுத்தக்கூடியவை. நோயறிதலுக்குப் பிறகு, நீங்கள் - உங்கள் ஒப்புதலுடன் - இந்த முன்கூட்டிய புண்களுக்கு சிகிச்சையைப் பெறலாம். உங்கள் முடிவுகள் இவை புற்றுநோய் புண்கள் எனக்காட்டினால், எக்ஸ்-கதிர்கள் மற்றும் நோயுடன் தொடர்புடைய அவை அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி போன்ற மேலதிக சிகிச்சைகளைப் பெறுவீர்கள். அல்லது இச்சிகிச்சைகளின் கலவையாக இருக்கலாம்.
புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியாத தருணங்களில், நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு உட்படுத்த முடியும். அதாவது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் வலி மற்றும் யோனி இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை நிவர்த்தி செய்தலாகும்.
தேவைப்பட்டால் ஒரு சுகாதார சேவை வழங்குநர் இந்த முறைகளை உங்களுடன் விரிவாக கலந்துரையாடுவார்.
எனக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டிருந்தால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுமா?
இல்லை, மொத்த கருப்பை நீக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் கருப்பை வாய் அகற்றப்பட்டிருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இல்லை.
நான் ஒரு திருநம்பி(Trans man), எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுமா?
உங்களுக்கு கருப்பை வாய் இருந்தால், ஆம் ஏற்படக்கூடும். உங்கள் கருப்பை வாய் அகற்றப்பட்டிருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இல்லை.
நான் HIV பாதிப்புக்குள்ளானவர், இதன் தாக்கம் எனக்கு எவ்வாறு இருக்கும்?
HIVயினால் மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் போன்ற பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு, இந்நோயின் அபாயங்கள் மிக அதிகம். HIV யுடன் வாழும் கருப்பை வாய் உள்ளவர்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். எனவே, HIV உடன் வாழும் மக்கள் தகுதியினடிப்படையில் HPVக்கு எதிராக தடுப்பூசி போடுவது மிக முக்கியம். மேலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழக்கமான திரையிடல் சோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி நான் எவ்வளவு தூரம் கவலைப்பட வேண்டும்?
மேலே விவரிக்கப்பட்ட, நீங்கள் அனுபவிக்கும் எந்த அறிகுறிகளும் பொதுவாக கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல. இருப்பினும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயலில் நீங்கள் பங்கு வகிக்க வேண்டியது அவசியம். இதன் பொருள் நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் HPV தடுப்பூசியைப் பெறுவதும், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் வழக்கமான திரையிடல் சோதனைகளில் கலந்துகொள்வதும் ஆகும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து நீங்கள் விடுபடுவதை உறுதி செய்ய இது சிறந்த வழியாகும்.
மூலம் : https://www.ippf.org/blogs/cervical-cancer-what-you-should-know
உங்கள் திரையிடல் சோதனையைப் பதிவு செய்ய, கீழுள்ள இலக்கத்திற்கு அழைக்கவும்
Happy Life மையம்
0765884881