ஒழுங்கற்ற மாதவிடாய் | The Family Planning Association of Sri Lanka

ஒழுங்கற்ற மாதவிடாய்

ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் என்ன?

மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே கணிக்க முடியாததாக இருந்தால், மாதவிடாய் சில மாதங்கள் வரத்தவறினால், அல்லது சுழற்சி நாட்கள் அதிகமாக மாறுபட்டால் அது ஒழுங்கற்ற மாதவிடாய் எனக் கருதப்படுகிறது. பொதுவான ஒரு மாதவிடாய் சுழற்சி 21–35 நாட்கள் ஆக இருக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது?
பொதுவான காரணங்கள்:

  • மன அழுத்தம் அல்லது திடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள்

  • ஹோர்மோன் மாற்றங்கள் (தைரொய்ட் பிரச்சினைகள், பருவமடைதல், மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்குதல்)

  • திடீர் உடல் எடை மாற்றங்கள்

  • அதிகப்படியான உடற்பயிற்சி



ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கருவுறுதலை/ கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா?

சில நேரங்களில் பாதிக்கலாம். ஒழுங்கற்ற சுழற்சிகள், முட்டை வெளியேறும் நேரத்தை (Ovulation) கணிக்க கடினமாக இருக்கலாம். இதனால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறையலாம். ஆனால் முறையற்ற சுழற்சி இருந்தாலும் பலரால் கர்ப்பம் தரிக்க முடிகிறது.


ஒழுங்கற்ற மாதவிடாய் ஆபத்தானதா?

பொதுவாக இது ஆபத்தானது அல்ல. ஆனால் தொடர்ந்து ஒழுங்கற்றதாக இருந்தால், அது ஹோர்மோன் சமநிலையின்மை அல்லது கவனம் தேவைப்படும் பிற உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.


எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

கீழ்கண்ட நிலைகளில் எதையேனும் அனுபவித்தால் ஒரு சுகாதார நிபுணரை அணுகுங்கள்:

  • பல மாதங்களாக மாதவிடாய் வராமல் காணப்பட்டால்

  • கடுமையான வலி அல்லது மிக அதிக இரத்தப்போக்கு இருந்தால்

  • தேவையற்ற முடி வளர்ச்சி, திடீர் உடல் எடை மாற்றம், அல்லது அதிக சோர்வு போன்ற வழக்கமில்லாத அறிகுறிகள் இருந்தால்


Bloom by FPA Sri Lanka அல்லது நாடு முழுவதும் உள்ள எங்களது சேவை மையங்களில் ஏதேனும் ஒன்றை அணுகுங்கள். அத்தோடு, 077 955 2979 என்ற எண்ணை அழைக்கவும்.
 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By