எந்த ஹோர்மோன்கள் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்துகின்றன?
ஈஸ்ட்ரோஜன்(Estrogen) மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்(Progesterone) ஆகிய ஹோர்மோன்கள்
பின்வருவனவற்றை நிர்வகிப்பதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்துகின்றன:
கருப்பையின் உள் சுவரின் வளர்ச்சி மற்றும் உதிர்வு
கரு முட்டை வெளியேற்றம்
மாதவிடாய் போக்கு மற்றும் அதன் கால அளவு
ஹோர்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகள் என்ன?
மாதவிடாய் போக்கு அல்லது சுழற்சியின் நீளத்தில் திடீர் மாற்றங்கள்
கடுமையான முகப்பரு அல்லது தேவையற்ற முடி வளர்ச்சி
மனநிலை மாற்றங்கள், சோர்வு அல்லது தூக்கப் பிரச்சினைகள்
எதிர்பாராத எடை மாற்றங்கள்
ஹோர்மோன் சமநிலையின்மைக்கான காரணம் என்ன?
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை
வழக்கத்திற்கு மாறான உணவு பழக்கம் அல்லது விரைவான எடை மாற்றங்கள்
தைரொய்ட் கோளாறுகள் போன்ற மருத்துவ நிலைமைகள்
சில மருந்துகள் அல்லது ஹோர்மோன் கருத்தடை மருந்துகள்
ஆரோக்கியமான ஹோர்மோன்களை அதிகரிக்க என்ன செய்யலாம்?
முழு ஊட்டச்சத்துள்ள சமநிலையான உணவு எடுத்துக்கொள்ளல்
முறையான மற்றும் தொடர்ச்சியான ஆனால் மிதமான உடற்பயிற்சி செய்தல்
தளர்வு பயிற்சிகள் அல்லது மனதிற்கு அமைதியான முறை மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
போதுமான உறக்கத்தைப் பெறல்
ஹோர்மோன்கள் தொடர்பாக எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
தொடர்ச்சியான முறையற்ற மாதவிடாய் சுழற்சிகள், திடீர் உடல் எடை மாற்றங்கள், மாதவிடாய்
முன் ஏற்படும் கடுமையான உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள்(PMS) அல்லது கருத்தரிப்பதில்
சிரமம் போன்றவற்றை நீங்கள் அவதானித்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.
Bloom by FPA Sri Lanka இல் மருத்துவர் ஒருவரைத் தொடர்பு கொள்ள 077 955 2979 என்ற
எண்ணை அழைக்கவும்