பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) பற்றிய விளக்கம்: ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் | The Family Planning Association of Sri Lanka

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) பற்றிய விளக்கம்: ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

Q: STI என்றால் என்ன?

STI (பாலியல் ரீதியாக பரவும் தொற்று) என்பது பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் ஒரு தொற்று ஆகும். சில STIகளுக்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும், ஆனால் ஏனையவை சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

Q: STI-களின் பொதுவான அறிகுறிகள் என்ன?

STIகள் எப்போதும் அறிகுறிகளைக் காட்டுவதில்லை, ஆனால் அவை அறிகுறிகளைக் காட்டும்போது, ​​நீங்கள் பின்வருவனவற்றைக் கவனிக்கலாம்:

  • ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பிலிருந்து அசாதாரணமான வெளியேற்றம்

  • சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்

  • பிறப்புறுப்புப் பகுதியில் புண்கள், கொப்புளங்கள் அல்லது தடிப்புகள்

  • அரிப்பு அல்லது எரிச்சல்

  • உடலுறவின் போது வலி

  • அடிவயிற்று வலி

Q: அறிகுறிகள் இல்லாமல் எனக்கு STI இருக்க முடியுமா?

ஆம். கிளமீடியா(Chlamydia) அல்லது கொனோரியா(Gonorrhoea)போன்ற STI-கள் உள்ள பலருக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. இதனால்தான் வழக்கமான பரிசோதனை முக்கியமானது.

Q: நான் எப்போது மருத்துவரைச் சந்திக்க வேண்டும் அல்லது பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்?

பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்:

  • நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டிருந்தால்

  • ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் அவதானித்தால்

  • நீங்கள் ஒரு புதிய பாலியல் உறவைத் தொடங்கினால்

  • உங்கள் துணைக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டிருந்தால்

Q: பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா?

பல பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு மருந்துகள் மூலம் முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும். குணப்படுத்த முடியாத நோய்களைக் கூட முறையான பராமரிப்பின் மூலம் திறம்பட நிர்வகிக்க முடியும்.

Q: எனக்கு பாலியல் நோய்த்தொற்று இருப்பதாக நான் நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

பதற்றமடைய வேண்டாம். சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, முறையான பரிசோதனை மற்றும் ஆலோசனைக்காக கூடிய விரைவில் தகுதிவாய்ந்த சுகாதார சேவை வழங்குநரை அணுகவும்.

உதவி மற்றும் ஆலோசனைக்கு எங்கள் மருத்துவ உதவி இலக்கத்திற்கு அழைக்கவும்: Bloom by FPA Sri Lanka - 077 955 2979

 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By