அறிகுறிகள் இல்லாமல் பாலியல் ரீதியான நோய்த்தொற்று (STI) ஏற்பட முடியுமா? | The Family Planning Association of Sri Lanka

அறிகுறிகள் இல்லாமல் பாலியல் ரீதியான நோய்த்தொற்று (STI) ஏற்பட முடியுமா?

Q: அறிகுறிகள் இல்லாமல் பாலியல் ரீதியான நோய்த்தொற்று ஏற்படுவது சாத்தியமா?

ஆம். பல பாலியல் ரீதியான நோய்த்தொற்றுகள், குறிப்பாக ஆரம்ப கட்டங்களில், எந்த அறிகுறிகளையும் காட்டாமல் உடலில் இருக்கக்கூடும்.

Q: எந்த பாலியல் ரீதியான நோய்த்தொற்றுகளுக்கு பொதுவாக அறிகுறிகள் இருப்பதில்லை?

பொதுவான உதாரணங்கள்:

  • கிளமிடியா (Chlamydia)

  • கோனோரியா (Gonorrhoea)

  • எச்.ஐ.வி. (HIV) – ஆரம்ப கட்டத்தில்

  • மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus – HPV)

Q: அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அது ஆபத்தானதா?

ஆம். அறிகுறிகள் இல்லாவிட்டாலும், சிகிச்சையளிக்கப்படாத பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் பின்வருவனவற்றுக்கு வழிவகுக்கும்:

  • மலட்டுத்தன்மை

  • நாள்பட்ட வலி

  • கர்ப்பகால சிக்கல்கள்

  • HIV பரவும் அபாயம் அதிகரித்தல்

Q: அப்படியானால் எனக்கு பாலியல் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை நான் எப்படி அறிவது?

தகுதிவாய்ந்த சுகாதார நிலையத்தில் பாலியல் நோய்த்தொற்று பரிசோதனை செய்வதே ஒரே நம்பகமான வழிமுறையாகும்.

பரிசோதனைக்கான சந்திப்பை முன்பதிவு செய்ய பின்வரும் இலக்கத்தில் எங்களை அழைக்கவும்: 077 955 2979

Q: நான் எவ்வளவு காலத்திருக்கொருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

இது உங்கள் பாலியல் செயல்பாடுகளைப் பொறுத்தது. இருப்பினும், பின்வரும் சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது:

  • பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பின்

  • ஒரு புதிய உறவைத் தொடங்கும் போது

  • உங்களுக்குப் பல பாலியல் துணைவர்கள் இருந்தால், தவறாமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Q: பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) ஏன் எப்போதும் அறிகுறிகளைக் காட்டுவதில்லை?

சில தொற்றுகள் மெதுவாக வளரக்கூடும் அல்லது முதலில் உடலின் உள்புற உறுப்புகளைப் பாதிக்கக்கூடும். அதனால் வெளிப்படையான அறிகுறிகள் பின்னர் மட்டுமே தோன்றலாம்.

Q: நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்ன?

அறிகுறிகள் இல்லை என்றால் நோய்த்தொற்று இல்லை என்று அர்த்தமல்ல. பரிசோதனை செய்வதே நோய்த்தொற்றை உறுதிப்படுத்திக்கொள்ளவும், உங்கள் மற்றும் உங்கள் துணையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உள்ள ஒரே வழிமுறையாகும்.

 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By