ஒப்புதல் என்பது எந்தவொரு உறவிலும், குறிப்பாக பாலியல் உறவில் ஒரு முக்கிய பகுதியாகும். ஒப்புதல் என்பது ஒரு செயலில் ஈடுபடும் அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளையும் தனிப்பட்ட எல்லைகளையும் மதிப்பதை உறுதி செய்கிறது.
"FRIES" என்ற சுருக்கமானது ஒப்புதலின் அனைத்து அம்சங்களையும் இலகுவில் நினைவில் கொள்ள உதவுகிறது.
F – ஒப்புதல் வழங்கப்படும்போது, அது தன்னார்வமாகவும், தனிப்பட்ட ஒருவரின் செல்வாக்கு, கையாளுதல் மற்றும் அழுத்தத்திற்கு உட்பட்டதாக இல்லாதிருப்பதை உறுதி செய்ய சுதந்திரம் வழங்கப்படுகிறது.
R – எந்த நேரத்திலும், பாலியல் செயலின் போதும் கூட ஒப்புதலை திரும்பப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்த மறுபரிசீலனை செய்யக்கூடியது.
I – ஒப்புதல் வழங்கும் நபர் செயல் முழுவதும் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதோடு, தகவலறிந்த முடிவை எடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த தெரிவிக்கப்படுகிறது.
E – மற்றைய நபர் இந்தச் செயலில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாக இருப்பதோடு அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை உணரவில்லை என்பதை உறுதிப்படுத்த ஆர்வமாக இருத்தல்.
S – அனைத்து பங்கேற்பாளர்களும் செயலின் போது அவர்கள் ஒப்புக்கொள்வதை சரியாக அறிந்திருப்பதை உறுதிப்படுத்தல்.
ஒப்புதல் பெறத் தவறுவது (சம்மதமற்ற செயல்பாட்டில் பங்கேற்பது) பாலியல் தாக்குதலின் ஒரு வடிவமாக இருக்கலாம் மற்றும் சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
பாலியல் ஒப்புதல் தொடர்பான சிறப்பு சூழ்நிலைகள்
பங்கேற்பாளர் 16 வயதிற்குட்பட்டவராக இருந்தால்
உடலுறவு கொள்ளும் நபர் 16 வயதிற்குட்பட்டவராக இருந்தால்
இலங்கையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கான குறைந்தபட்ச சட்ட வயது 16 ஆகும். 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் (அவரின் சம்மதத்துடனோ அல்லது இல்லாமலோ) உடலுறவு கொள்வது சட்டப்பூர்வ பாலியல் வன்புணர்வாகும், மேலும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அத்தகைய குறிப்பிடத்தக்க முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்களாக கருதப்படுவதில்லை.
மதுபானம் அல்லது போதைப்பொருட்களின் பாவனையில் உள்ள நபர்கள்
மதுபானம் மற்றும் / அல்லது போதைப்பொருட்களின் பாவனையின் கீழ் உள்ள நபர்கள் எந்தவொரு செயலுக்கும் தகவலறிந்த ஒப்புதல் அளிக்க முடியாது, எனவே, மதுபானம் மற்றும் / அல்லது போதைப்பொருளின் பாவனையின் கீழ் உள்ள ஒரு நபருடன் பாலியல் செயல்பாடு எப்போதும் சம்மதமற்றது. மதுபானம் மற்றும் / அல்லது போதைப்பொருள் காரணமாக மயக்கமடைந்த அல்லது பொறுமையற்ற நிலையில் இருக்கும் நபர்கள் இதில் அடங்குவர்.
அறிவாற்றல் குறைபாடு உள்ள நபர்கள்
அறிவுசார் குறைபாடுகள் கொண்ட நபர்கள் பாதுகாப்பான ஒருமித்த பாலியல் உறவுகளைப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர், ஆனால் எல்லா வகையான பாலியல் செயல்பாடுகளைப் பற்றியும் தகவலறிந்த முடிவை எடுக்கும் திறனை எப்போதும் கொண்டிருக்க மாட்டார்கள். ஒப்புதல் பெறும்போது, அது நபரின் திறனைப் பொறுத்து தனிப்பட்ட அடிப்படையில் செய்யப்பட வேண்டும், மேலும் அறிவுசார் குறைபாடு கொண்ட நபருக்கு புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்தி கலந்துரையாடப்பட வேண்டும்.
நெருக்கமான படங்கள் அல்லது காணொளிகளின் பகிர்வு
டிஜிட்டல் தளத்திலும் (சமூக ஊடக தளங்கள் உட்பட) ஒப்புதல் முக்கியமானது. ஒப்புதல் இல்லாமல் அந்தரங்க படங்களைப் பகிர்வது சட்டவிரோதமானது மற்றும் பாலியல் துன்புறுத்தலின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
களவு
களவு என்பது பாலியல் ரீதியான தாக்குதலின் ஒரு வடிவமாகும். இது ஒரு நபர் ஆணுறையுடனான (கருத்தடைக்கான தடுப்பு முறை) பாலியல் செயல்பாட்டிற்கு சம்மதிக்கும்போது, இணை ஆணுறை அணியாதிருத்தல் அல்லது மற்ற நபருக்குத் தெரியாமல் ஆணுறையை அகற்றுதல்.
ஒப்புதல் என்பது ஆரோக்கியமான பாலியல் உறவுகளின் எளிதான மற்றும் இன்றியமையாத பகுதியாகும். இது நீண்டகால உறவுகளில் இருக்கும்போது கூட தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக உணர்வதோடு அவர்களின் எல்லைகள் மதிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எழுத்தாக்கம்
இலங்கை குடம்பத்திட்ட சங்கம்