எமது உற்பத்திகள்

மித்துரி - வாய்மூல மாத்திரை
ரூ. 140.00இது வாய்மூலம் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை (OCP). இதில் பெண்களின் ஹோர்மோன்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ட்ரோஜன் மற்றும் புரெரஜெஸ்டின் குறைந்த அளவை எத்திநெல் எஸ்ட்ராடியல் மற்றும் லெவனே ஜெஸ்ரல் என்பவை உள்ளடங்கியுள்ளன. கர்ப்பத்தை தடுப்பதற்கு தினசரி உட்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஒழுங்காக உட்கொள்ளுவது 99.9% வெற்றியளிக்கும். ஜேர்மனியின் பேயர் ஸ்கெரிங் பார்மா (Bayer Schering Pharma) கம்பனியால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இலங்கைப் பெண்மணி 50 வருடங்களுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டுள்ளது. மாத்திரை உட்கொள்ளுவதை நிறுத்தினால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படாது.

ஈஸி கிளைட் டிலே ஜெல்
ரூ. 120.00நீண்ட உடலுறவுக்கு நீரில் கரைக்கும் கிரீம். இது 5% பென்சோகெய்ன் உள்ளடங்கியுள்ளது.

ஈஸி கிளைட் ஜெல்
ரூ. 60.00நீரில் கரைக்கும் எரிவு இல்லாத மற்றும் கறைபடியாத உராய்வு நீக்கி. இது பெண்ணுறுப்பை ஈரப்படுத்துவதன் மூலம் உடலுறவின்போது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நீண்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது.

கொப்பர் T
ரூ. 400.00கொப்பர் T என்பது T வடிவத்திலான ஒரு சிறிய உபகரணம். இது பெண்ணுறுப்புக்குள் பொருத்துகிற (IUD) உபகரணமாகும். வளையக்கூடிய பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டு செம்பினால் சுற்றப்பட்டு பயிற்சிபெற்ற மருத்துவ உத்தியோகத்தரால் கர்ப்பப்பை வாசலில் பொருத்தப்படுகிறது. இது ஹோர்மோன் அற்றது. அதனால் பெண்ணின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்ற்தை ஏற்படுத்தாது. (IUD) குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு இருக்கும். இது மிகச் சிறந்த கருத்தடை உபகரணமாகும். இதை அகற்றியவுடன் கருத்தறிக்க முடிவது இதில் உள்ள சிறப்பம்சமாகும்.

ஜெடெல்
ரூ. 2500.00இது தோலுக்கு அடியில் புகுத்தும் ஒரு கருத்தடை முறையாகும். இது நீண்டகால பலன் தரக்கூடியது. ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். கர்ப்பமடைய விரும்பினால் ஐந்து வருடங்கள் முடிவடைவதற்கு முன்னர் எந்த நேரமும் அகற்றிவிட முடியும். 99% க்கு மேல் பலன் தரக்கூடியது. அதை அகற்றியவுடன் கர்ப்பமடையக்கூடிய சாத்தியம் இருப்பது சிறப்பம்சமாகும்.

பிரீதி சுப்பர்
ரூ. 50.00குமிழ் ஆணுறை இயற்கையான மரப்பால் இரப்பரினால் தயாரிக்கப்பட்டுள்ள ஆணுறையாகும். இது சரியான இடத்தில் உயர்த்தப்பட்ட 100 இரப்பர் 'குமிழ்'களைக் கொண்டுள்ளதோடு கடுமையான உராய்வு உணர்ச்சியைக் கொண்டுள்ளது. இருவருக்கும் ஒரே நேரத்தில் திருப்தியையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியது.

ஸ்டெமினா(சக்தி)
ரூ. 80.00இந்த ஆணுறையின் உட்புறம் பென்சோகெய்ன் பூசப்பட்டுள்ளது. இதனால் உச்சத்தை அடைவதைத் தாமதப்படுத்தி நீண்ட நேரம் உறவுகொள்ளும் இன்பத்தைத் தருகிறது. பென்சோகெய்ன் விரைவில் விந்து வெளியேறுவதைத் தடுத்து நிண்ட நேரம் உறவுகொள்ளும் ஆற்றலை அதிகரிக்கிறது.