About FPA Sri Lanka | The Family Planning Association of Sri Lanka

மீள்பார்வை

1953ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கமானது இலங்கையின் குடும்பத் திட்டமிடல் தொடர்பில் புத்தாக்கமான மற்றும் சவால் மிகுந்த செயற்பாடுகளை ஆராயும் அரச சார்பற்ற நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது. குடும்பத் திட்டமிடல், பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரம் மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நாட்டின் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று என்பதில் நாம் மிகுந்த பெருமை கொள்கின்றோம்.

வாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது. எனவே, பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரம் குறித்த பின்வரும் பிரதான அம்சங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

  • போதிய தகவல் மற்றும் சேவைகளை வழங்கல்.
  • பயிற்சி மற்றும் இடையீடுகள்
  • ஏற்றுக்கொள்ளல், அணுகும் தன்மை மற்றும் பாலியல், இனவிருத்திச் சுகாதாரத்தின் தரம் என்பவற்றை முன்னேற்றுவதற்கான முயற்சிகள்
  • மனித உரிமைகள் சார்ந்த மற்றும் பால்நிலை கூருணர்வான அணுகுமுறைகளை உள்ளடக்கல்.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம், மக்களின் இனவிருத்திச் சுகாதாரம் சார்ந்த தேவைகளை பாதுகாக்கவும், முழுமை செய்யவும் நாம் பணியாற்றுகின்றோம். நிறுவனம் என்ற வகையில் சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மாநாட்டின் (ICPD) உறுதிமொழியை நாம் மதிக்கின்றோம். அத்துடன், வறுமையை எதிர்கொள்வதற்கான மிகவும் முக்கியமான காரணியாக பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகும் வசதிக்கான அபிலாஷைகளையும் நாம் மதிக்கின்றோம்.

எமது பணியில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குவதன் மூலம், பரந்தளவிலான பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவைகளின் அணுகும் வசதியை மேம்படுத்துவதற்கு நாம் பங்களிக்கின்றோம்:

  • குடும்பத் திட்டமிடல் மற்றும் கருத்தடை
  • பாதுகாப்பான தாய்மை (தேவையற்ற கர்ப்பம் தரித்தலுடன் சம்பந்தப்பட்ட அம்சங்கள் உள்ளடங்கலாக)
  • பாலியல் ரீதியாக பரவும் தொற்றுக்கள் (எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளடங்கலாக)
  • SRH information and counselling for adolescents and youth
  • Promotion of mental health and provision of counselling
  • Sub-fertility treatment and counselling

தொலைநோக்கு

அனைவருக்குமான உரிமை என்பதன் அடிப்படையில் பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவைகளை வழங்குவதன் முன்னோடியாக இருத்தல்.

இலக்கு

பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார உரிமைகளுக்காக பரிந்து பேசுவதின் மூலம் தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உறவுகளை செழிப்பாக்கல். அத்துடன், நிலைத்திருக்கும் தன்மை மற்றும் தன்னார்வ சேவையை பேணும் அதேவேளை, சேவைகளை வழங்கல்.

Core Values

  • தரம் - எமது உற்பத்திகள், சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியன பால்நிலை கூருணர்வு மிக்கதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், அனைவராலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் இருக்கும்.
  • தெரிவு - சுதந்திர தெரிவு மற்றும் அனைத்து தனிநபர்களினதும் உரிமைகள் குறித்து நாம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளதுடன், அவற்றை மதிக்கின்றோம்.
  • சிறந்த நிர்வாகம் - பங்கேற்பு சார்ந்த, இணக்கம் சார்ந்த, பொறுப்புள்ள மற்றும் வெளிப்படையான தீர்மானம் எடுத்தலை நாம் மதிக்கின்றோம். செயற்பாடுகளை முன்னெடுக்கப்படும் நடைமுறைப்படுத்தப்படும் தீர்மானங்கள் பொறுப்புடையதாக, வினைத்திறன் மிக்க, பயனுறுதி மிக்க, சமத்துவமான மற்றும் உள்ளடக்கமானதாக இருப்பதுடன், சட்ட ஒழுங்கினை பின்பற்றுவதாக அமைகின்றது. எமது இலக்குகளையும், கோட்பாடுகளையும் எட்டுவதற்கு தன்னார்வத் தொண்டின் ஆர்வமே பிரதானமானது என்பதனை நாம் நம்புகின்றோம்.
  • நிலைத்திருக்கும் தன்மை - நிகழ்ச்சியின் வினைத்திறன், நிதிப் பாதுகாப்பு மற்றும் நிறுவன நம்பகத்தன்மையின் நிலைத்திருக்கும் தன்மையை நாம் பேணுகின்றோம்.
  • பல்வகைத் தன்மை மற்றும் சமத்துவம் - இனம், பால் அல்லது பாலியல் அமைப்பு சார்ந்த பாரபட்சமின்றி எமது சேவைகள் தேவையாக உள்ளவர்கள் அனைவருக்கும் அவற்றை வழங்குவதற்கு பல்வகைத் தன்மை மற்றும் சமத்துவத்தில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மக்களின் சமூக-கலாசார விழுமியங்கள், பழக்கங்கள் மற்றும் அக்கறைகளை நாம் மதிக்கின்றோம்.

Message from Executive Director

Welcome to FPA Sri Lanka’s website! Whatever the reason you visited our website for, we are pleased to demonstrate to you the wide array of services and activities of our organization in the important area of Sexual and Reproductive Health and Rights.

Our journey began 65 years ago introducing family planning services to the country, when no other party was keen on doing it. A policy decision taken by the government in 1962, integrated family planning to the Maternal and Child Health services rendered by the state. A large quantum of work FPA Sri Lanka has done subsequent to this move, has ensured that family planning products can be accessed by all through the pharma trade, SRH education is taken to Youth and needy groups and free SRH services are accessible for Poor, Marginalized and Under-served communities.

Thus working hand-in-hand with the government, complementing and supplementing products and services, advocating remedies for policy gaps, FPA Sri Lanka has contributed to Sri Lanka achieving excellent health indices on Sexual and Reproductive Health. Our focus is still on SRH, working towards the lofty vision of “building a country with Sexual and Reproductive Heath, as a right to all”. In this attempt we engage with multiple stakeholders and the full spectrum of activities presently done, will be demonstrated in this site. If they inspire you, I suggest you join us as a volunteer, a group that forms the backbone of our organization.

There still remains a lot to be done in the realization of our vision in areas as education, advocacy and policy reforms. FPA Sri Lanka’s commitment to cause is unwavering and will continue in the years to come. The organization will remain responsive to the ever-changing and increasing needs of our communities to deliver our mandate.

Thushara Ranasinghe

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By