அஞ்சலி | The Family Planning Association of Sri Lanka
By root, 17 December, 2023
Sub title
In appreciation of our past Executive Directors enormous contributions to develop FPA Sri Lanka to its present standing we herewith publish highlights of their terms in office.
Has sidemenu
Sidemenu
Newsletter category
Article 2 image row
Image
Title
திரு. தயாஅபேவிக்கிரம
Body
திரு. தயா அபேவிக்கிரம 1975ஆம் ஆண்டு இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் 2003ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை இப்பதவியில் சேவையாற்றினார். அவருடைய 28 வருட சேவைக் காலம் நிறைவேற்றுப் பணிப்பாளர்களின் சேவைக் காலங்களில் மிக நீண்ட சேவைக் காலமாகும். இலங்கை குடும்பத்திட்ட சங்கம் இவருடைய தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் படைத்துள்ளது.

1983ஆம் ஆண்டு, வென்னப்புவ, நயினாமடத்தில் 10 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டு 'சிந்தனை பயிற்சி நிலையம்' ஸ்தாபிக்கப்பட்டது.

1978ஆம் ஆண்டு, அவர் கருத்தடை மாத்திரை சில்லறை விற்பனை பிரிவை ஆரம்பிக்கும் பணிகளை முன்னெடுத்தார். இதுதான் நிறுவனத்தின் சுய நிலைபேறான தன்மையின் ஆரம்பமாகும். 2015ஆம் ஆண்டு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு எமது வருமானத்திற்கு 90.15% பங்களிப்புச் செய்தது. இது அவருடைய நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்த தொலை நோக்கிற்கு சான்று பகர்கிறது.

1980ஆம் ஆண்டு, அவர் 'சமூக முகாமைப்படுத்தல் ஒருங்கிணைந்த கிராமிய குடும்ப சுகாதார கருத்திட்டத்தை' ஆரம்பித்தார். இதில் கீழ்மட்ட தொண்டர்கள் குடும்பத்திட்ட செய்தியை கிராமங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

1983ஆம் ஆண்டு, கிழக்கு, மேற்கு மற்றும் தென் மகாண பாடசாலைகளில் ஆசிரியர்களுக்காக இனப்பெருக்க சுகாதார கல்விபற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1986ஆம் ஆண்டு, இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தில் வைத்தியர்களுக்கான முதலாவது AIDS தடுப்பு பயிற்சி நடத்தப்பட்டது. 1988ஆம் ஆண்டு HIV/AIDS விழிப்புணர்வூட்டல் மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு, ஆலோக்கய உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இன்றும் இது இயங்கிக்கொண்டிருக்கிறது.

இது இளைஞர்களுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம்பற்றிய ஆலோசனை சேவைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குகிறது.

1992ஆம் ஆண்டு, கொழும்பில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 10-19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு இனப்பெருக்க சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

1994ஆம் ஆண்டு, இலங்கை குடும்பத்திட்ட சங்கம், குடும்பம், குடும்பத் திட்டம் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம்பற்றிய செய்தியை பரவலாக பலர் மத்திக்கு எடுத்துச் செல்வதற்கு 'யுவதிபதி' என்ற முழு நீள விவரண திரைப்படத்தை வெளியிட்டது. இது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் 1995 சரசவி திரைப்பட விருதையும் பெற்றது.

இலங்கை குடும்பத்திட்ட சங்கம் அவருடைய அனைத்து முன்னெடுப்புகளுக்கும் சேவைகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறது. அத்துடன் அவரை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறது.

அவர் ஆத்மா சாந்தியடைக.
Image
Title
ஜனாப்இஸ்மத்இஸடீன்
Body
ஜனாப் இஸடீன் தேசிய பேரவை பொருளாளராகவும் பிராந்திய நிறைவேற்று சபையின் உறுப்பினராகவும் இருந்தார். அவர் 1999ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தில் இணைந்தார். இதில் பல ஆண்டுகளாகப் பல பதவிகளில் சேவையாற்றினார். அவர் கொழும்பு லயன்ஸ் கழகத்தில் பொருளாளராக பத்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் எம்மிடம் வந்தார். இஸ்மத் ஓர் உண்மையான தொண்டர். அவர் பெருந்தன்மை, ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை ஆகிய குறிப்பிடத்தக்க பண்புகளைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இந்தப் பண்புகள் அவரை மட்டுமல்ல இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தையும் உயர்நிலைக்குக் கொண்டுவந்தது. அவர் விசால இதயம் படைத்தவர். அவர் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பாராட்டிய அதேவேளையில் தன்னுடைய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் துணிச்சலுடன் வெளியிட்டார். அவர் அனைவரின் நன்மைக்காக எப்பொழுதும் செயலாற்றினார். அவர் தேசிய பேரவையிலும் பிராந்திய நிறைவேற்று சபையிலும் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்புவது என்பது கஷ்டமான செயலாகும்.
Image
Title
திரு. நிமல்வீரசேகர
Body
திரு. வீரசேகர மரணமடைகின்றபோது தேசிய பேரவையின் பொதுச் செயலாளராக இருந்தார். ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான நிமல் மிகச் சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டிருந்தார். இவர் பட்டய சந்தைப்படுத்தனர், இராஜதந்திரி, ஐக்கிய இராச்சியத்தின் சந்தைப்படுத்தல் பட்டய நிறுவகத்தின் முழுநேர உறுப்பினர், தெற்காசிய சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவகத்தின் கௌரவ உறுப்பினர், அவுஸ்திரேலிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் கௌரவ உறுப்பினர் மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் முழுநேர உறுப்பினர் என்ற வகையில் செயலாற்றினார்.

அவருடைய அறிவைப் பகிர்ந்துகொள்ளும் பெருந்தன்மை, சமூக காரணங்களுக்காக அவருடைய பங்களிப்பு என்பவை ஏனைய சந்தைப்படுத்துனர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது. அவர் இலங்கை முகாமைத்துவ நிறுவகத்திலிருந்து ஓய்வுபெறும்வரைக்கும் வர்த்தக பேரவை மற்றும் கைத்தொழில் ஒன்றியத்தில் பேரவை உறுப்பினராக இருந்தார். இவர் தருண அருண நிறுவகத்தின் பணிப்பாளராக இருந்தார். இது இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உலக வங்கி நிதியுதவி அளித்த நிகழ்ச்சித்திட்டமாக நடைபெற்றது. இது இலங்கை பட்டதாரிகள் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. இவர் பணிப்பாளராக இருக்கும்போதே ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் சந்தைப்படுத்தல் ஆலோசனைக் குழுவின் அங்கத்தவராகவும் இருந்தார். இவர் கொழும்பு மிலேனியம் சிட்டி, ரோட்டறி கழகத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். அவர் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் ரோட்டறி கழகம் சுனாமியால் சேதமடைந்த பாடசாலையொன்றை ரூ.50,000,000/- முதலீட்டில் புனரமைத்துக் கொடுத்தது. அவர் சந்தைப்படுத்தல் பணிப்பளராகவும் உப தலைவராகவும் இரண்டு பாத்திரங்களை வகித்த இலங்கை குடும்பத்திட்ட சங்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பை இப்பொழுது பார்ப்போம். இருபது வருடங்களுக்கு மேலாக, இலங்கை குடும்பத்திட்ட சங்கம் ஓர் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனமாக அதன் நிலைப்பாட்டுக்கு நன்கொடையிலேயே தங்கியிருந்தது. நீண்ட காலத்திற்கு முன்பு சமூக தொழில் முயற்சி என்பது ஆடம்பரமானதாக இருந்தபோது, இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் முகாமைத்துவம், நிதி ரீதியாக தன்னிறைவடையும் நோக்கில் கருத்தடை மாத்திரைகளை சந்தைப்படுத்தும் பயணத்தை ஆரம்பித்தது. இதன் மூலம் சந்தையில் இருந்த இடைவெளி நிரப்பப்பட்டது. அவர்கள் செய்தது இன்று வரலாறாக இருக்கின்றது. அதன் விளைவாக இலங்கை குடும்பத்திட்ட சங்கம் தன்னிறைவடைந்துள்ளதோடு நிதி ரீதியாக சுயமாக இயங்கும் நிலையில் இருக்கின்றது. 1990ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தை நிலைபேறானதாகவும் சுய நிதியிடல் அமைப்பாகவும் உருவாக்கி சமூக சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை சமூக தொழில் முயற்சியாக மாற்றியவர்களில் நிமலும் முக்கியமான ஒருவராகும். இது அவரை இலங்கையின் தொழில் முயற்சிகள் துறையில் முன்னோடியாகத் திகழச்செய்துள்ளது.

இஸ்மத், நிமல் இருவரும் என்றும் எம் மனதை விட்டு அகலமாட்டார்கள். இது அவர்கள் இலங்கை குடும்பத்திட்ட சங்கத்திற்கு அளித்த பங்களிப்புக்காக மட்டுமல்ல அவர்களுடைய அறிவுசார் பெருந்தன்மை, நகைச்சுவை, வேடிக்கைப் பேச்சுடன் அவர்கள் பல்லின குழுக்களுடன் உரையாடி சேவையாற்றியமை எல்லாம் அவர்களை என்றும் நினைவுபடுத்துகின்றன.