உடல் பிம்பம் மற்றும் பாலியல் நம்பிக்கை | The Family Planning Association of Sri Lanka

உடல் பிம்பம் மற்றும் பாலியல் நம்பிக்கை

உடல் பிம்பத்தைப் புரிந்துகொள்ளல்

உடல் பிம்பம் என்பது உங்கள் உடலமைப்பை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் மற்றும் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. இது பாலியல் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை மிகுந்த அளவில் பாதிக்கும்.

எதிர்மறையான உடல் பிம்பத்தின் விளைவுகள்

  • நெருக்கமான தருணங்களில் பதட்டம் அல்லது தன்னம்பிக்கை குறைதல்

  • பாலியல் செயல்பாடுகளைத் தவிர்த்தல்

  • தேவைகள் அல்லது ஆசைகளை வெளிப்படுத்துவதில் சிரமம்

  • ஒட்டுமொத்த திருப்தி குறைதல்

எதிர்மறையான உடல் பிம்பத்திற்கான காரணங்கள்

  • சமூக அழகுக் கோட்பாடுகள் மற்றும் ஊடகங்களின் தாக்கம்

  • தனிப்பட்ட தாழ்வுணர்வுகள் மற்றும் கடந்தகால அனுபவங்கள்

  • மற்றவர்களுடன் ஒப்பிடுதல்

உடல் பிம்பத்தை மேம்படுத்தல்

  • தன்னிறைவைப் பயிற்சி செய்து, தனிப்பட்ட பலங்களில் கவனம் செலுத்துதல்

  • யதார்த்தமற்ற அழகு தரங்களை நாடாது இருத்தல்

  • உடற்பயிற்சி, மனஅமைதி போன்ற சுய பராமரிப்பு செயல்களில் ஈடுபடுதல்

  • உணர்வுகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி துணையுடன் வெளிப்படையாகத் கலந்துரையாடல் .

தொழில்முறை ஆதரவு

அறிவியல்-நடத்தைச் சிகிச்சை (CBT) போன்ற உளநல சிகிச்சைகள் ஆழமான தாழ்வுணர்வுகளை சமாளிக்க உதவும்.

நன்மைகள்

ஒரு நேர்மறையான உடல் பிம்பம் உணர்ச்சி நல்வாழ்வு, நெருக்கம் மற்றும் பாலியல் திருப்தியை மேம்படுத்துகிறது.

எந்தவொரு பாலியல் சுகாதார ஆலோசனைகளுக்கும் 0779552979 என்ற எண்ணில் FPA Sri Lankaவின் Bloomஐ தொடர்பு கொள்ளவும்.

 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By