குறைந்த பாலியல் ஆசை என்றால் என்ன?
குறைந்த பாலியல் ஆசை என்பது பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் அல்லது ஆசை குறைவதைக் குறிக்கிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடியது. மேலும் இது தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ இருக்கலாம்.
உடல் ரீதியான காரணங்கள்
ஹோர்மோன் மாற்றங்கள் (குறைந்த டெஸ்டோஸ்டெரோன், மாதவிடாய் நிறுத்தம்)
நீண்டநாள் நோய்கள் (நீரிழிவு, தைரொய்ட் பிரச்சினைகள்)
மருந்துகள் (மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகள், ரத்த அழுத்த மருந்துகள்)
சோர்வு, தவறான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாமை, போதைப்பொருள் பயன்பாடு
உளவியல் ரீதியான காரணங்கள்
மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு
உறவு பிரச்சினைகள்
கடந்தகால அதிர்ச்சி அல்லது தீர்க்கப்படாத மோதல்கள்
உடல் தோற்றத்தைப் பற்றிய தாழ்வு எண்ணம்
அறிகுறிகள்
பாலியல் எண்ணங்கள் அல்லது கனவுகள் குறைதல்
உடலுறவைத் தொடங்கும் முயற்சி குறைதல்
பாலியல் செயல்பாடுகளின் போது மகிழ்ச்சி குறைதல்
குறைந்த பாலியல் ஆசைக்கு தீர்வுகள்
அடிப்படை மருத்துவ அல்லது உளவியல் காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல்
தேவையெனில் ஹோர்மோன் சிகிச்சை வழங்கல்
மனநலம் மற்றும் உறவுகளை மேம்படுத்த ஆலோசனை அல்லது சிகிச்சை
முழு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள்
உதவியை நாடுதல்
ஒரு மருத்துவ நிபுணருடன் பேசுவது சரியான அணுகுமுறையை கண்டறியவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
எந்தவொரு பாலியல் சுகாதார ஆலோசனைகளுக்கும் 0779552979 என்ற எண்ணில் FPA Sri Lankaவின் Bloomஐ தொடர்பு கொள்ளவும்.