சிறுநீரக தொகுதியில் ஏற்படும் தொற்று (UTI) | The Family Planning Association of Sri Lanka

சிறுநீரக தொகுதியில் ஏற்படும் தொற்று (UTI)

உங்கள் சிறுநீரக பாதையில் கிருமிகள் உருவாகி, உங்களைப் பாதிக்கும்போது, உங்களுக்கு சிறுநீரக பாதை நோய்த்தொற்று (UTI) ஏற்படுகிறது.

இது இவற்றை பாதிக்கலாம்:

  • சிறுநீர்ப்பை - UTI இன் மிகவும் பொதுவான வகையான இது சிறுநீர்ப்பை அழற்சி (cystitis) என்று அழைக்கப்படுகிறது.
  • சிறுநீர்க்குழாய் (உங்கள் சிறுநீர் வெளியேறும் இடம்). இது யுரேத்ரிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • சிறுநீரகங்கள். இதன் தீவிர தன்மை நுண்குழலழற்சp (pyelonephritis) ஆகும;.

UTI: இது எப்படி நிகழ்கிறது?

உங்கள் ஆசனவாயைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாக்டீரியா சிறுநீர்கழிக்கும் பகுதியில் நுழையும் போது சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்ப்பை வீக்கமடைகிறது, இது UTI உருவாகும் மிகவும் பொதுவான முறையாகும்.

இது அடிக்கடி  கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அல்லது பாலுறவு கொண்ட பிறகு உங்கள் அடிப்பகுதியைத் துடைப்பதின் மூலமும் எற்படலாம்.

யார் வேண்டுமானாலும் UTI I உருவாக்கலாம், ஆனால் பெண்களின் உடல் அமைப்பில் ஆசனவாய்க்கு அருகில் சிறுநீர்க்குழாய் அமைந்துள்ளதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

UTI ஐ உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய கூடுதல் காரணங்கள்:

  • உங்கள் சிறுநீர் பாதையைத் தடுக்கும் நிலைமைகள்
  • உங்கள் சிறுநீர்ப்பையைக் காலியாக்குவதில் சிரமம்
  • கர்பமாக இருப்பது
  • நீரிழிவு நோய்
  • பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By