ACCREDITATION | The Family Planning Association of Sri Lanka

அங்கீகாரம்

சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) தேசிய உறுப்பினர் சங்கத்தின் உலக ஒன்றியமாகும். இது தொலைநோக்கு, பொதுவான மைய விழுமிய தொகுதி, மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதில் உறுதிப்பாடு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டு ஒருங்கிணைந்து பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் மீது செயலாற்றுகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு உறுப்பினர் சங்கம் அவர்களின் நாட்டின் தேவைகளுக்கு ஏற்றவகையில் தமது சொந்த மூலோபாயத்தை விருத்தி செய்கிறது. ஒன்றியம் தந்துள்ள பல்வகைத்தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டின் மூலோபாயங்கள் வேறுபடுகின்றன. மூலோபாயத்திலும் அதை அமுலாக்குவதிலும் வேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பினர் சங்கத்திடமும் ஒருசில கொள்கைகளையும் தரங்களையும் மேம்படுத்துவது எதிர்பார்க்கப்பட்டது.

அங்கத்துவத்தைப் பதிவுசெய்வதற்கான நிபந்தனையாக அனைத்து உறுப்பினர் சங்கங்களும் 10 அடிப்படை கொள்கைகளையும் 48 வெவ்வேறான தரங்களையும் நிறைவேற்ற வேண்டுமென சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியத்தினால் வேண்டப்படுகின்றது. சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியத்தின் உயர் தீர்மானம் எடுக்கும் நிறுவனமான ஆளுகை பேரவை - அங்கத்துவ சங்கங்களின் தரத்தை உறுதிப்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைமுறைகள் ஊடாக வழிகாட்டி உதவுகிறது. அத்துடன், இவற்றை இணங்கியொழுகுவது பூர்த்திசெய்யுமிடத்து ஒன்றியத்தின் "அனுமதி பதிவுசெய்யப்பட்ட அங்கத்தவராக" அங்கீகரிக்கப்படுகிறது.

அனுமதி பதிவுசெய்யும் முறைமையின் அடிப்படை நோக்கம் பின்வருவனவற்றை உறுதிசெய்வதாக அமைகிறது.

  • அங்கத்துவ சங்கங்கள் அவர்களின் செயலாற்றுகையையும் வகிக்கும் பாத்திரத்தையும் மேம்படுத்துவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த உபகரணங்களைக் கொண்டிருத்தல்.
  • அங்கத்துவ சங்கங்களின் வேலைகளில் தேசிய பொது நம்பிக்கை அதிகரித்தல்.
  • சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியம் ஒரு வினைத்திறன்மிக்க ஒன்றியமாக பெறுபேறுகள், சேவைகளின் தரம், நம்பகத்தன்மை என்பவற்றில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என்பதற்கு சர்வதேச நம்பிக்கை அதிகரித்துள்ளது. மற்றும்,
  • செயலகம் ஒன்றியத்தில் கற்கை மற்றும் அவற்றைப் பகிர்ந்துகொள்ளுவதில் வசதிகளை ஏற்படுத்துவதற்குப் புதிய வழிகளைக் காண்கிறது.

இலங்கை குடும்பத்திட்ட சங்கம் நிலை 1, நிலை 2 ஆகிய இரு நிலைகளிலும் அனுமதி பதிவுசெய்து சான்றிதழைப் பெறுவதில் வெற்றியடைந்துள்ளது. நிலை 2இல் அனுமதி பதிவுசெய்வதில் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவது அங்கத்துவ சங்கமாக இருந்தது. இலங்கை குடும்பத்திட்ட சங்கம் பின்வரும் சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியத்தின் தரங்களையும் ஈடுபாடுகளையும் பின்பற்றி மீளாய்வு செய்யப்பட்டது.

வெளிப்படைத்தன்மையும் சனநாயகமும்

இந்த சங்கம் வெளிப்படையான மற்றும் சனநாயக சட்ட உள்பொருளைக் கொண்டிருக்கிறது. இது பணியாட் தொகுதியினருடன் சேர்ந்து அனைத்து பின்னணிகளையும் சேர்ந்த தொண்டர்கள் பூரணமாக செயலூக்கத்துடன் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.

சிறந்த - நிர்வகிப்பு

இந்த சங்கத்திற்கு அதன் அங்கத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக நிலையம் இருக்கின்றது. அது அதன் வகிபாகத்தைப் புரிந்துகொண்டு கூட்டாக பொறுப்புகளை நிர்வகிக்கிறது.

மூலோபாயமும் முன்னேற்றமும்

சங்கம் அதன் நாட்டுக்கு மிகப்பொருத்தமான முறையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் என்பவற்றை வித்தியாசப்படுத்துகிறது. சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஒன்றியத்தின் செயற்பணி, மைய விழுமியம், கொள்கைகள் என்பவற்றிற்கு மிக வலுவான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும்

இந்த சங்கம் எப்பொழுதும் அதன் பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளுகிறது. அத்துடன், அதன் சேவை பெறுநர்கள், பங்கீடுபாட்டாளர்கள், நன்கொடை வழங்குனர்கள் ஆகியோர்களுக்கு நம்பகத்தன்மையுடன் செயலாற்றுகின்றது.

சிறந்தமுறையில் முகாமைப்படுத்தப்பட்டுள்ளது

சங்கம் அதன் வேலைத்திட்டத்தை திட்டமிடுவதற்கும் அமுலாக்குவதற்கும் அதன் நிதி வளங்களையும் மனித வளங்களையும் வினைத்திறன் மிக்க வகையிலும் பயனுறுதிமிக்க வகையிலும் முகாமைப்படுத்துகிறது.

நிதி ரீதியாக தன்னிறைவடைதல்

சங்கம் அதன் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உதவுவதற்காக பொதுவான நிதி நிலைபேறான தன்மையையும் வளங்களையும் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது.

சிறந்த தொழில் தருநர்

சங்கம் தேர்ச்சிபெற்ற பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்து அவர்களை கௌரவமாக நடத்துகிறது. அத்துடன் அவர்கள் வினைத்திறன்மிக்கவகையில் செயலாற்றுவதற்காக அவர்களுக்கு தொழில் நிபந்தனைகள் உண்டு.

பெறுபேறுகளில் ஈடுபாடு

சங்கம் சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கும் செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் என்பவற்றை எவ்வாறு அடைவது என்பதை அதற்கு எடுத்துக்காட்ட முடிகிறது.

தரத்தில் ஈடுபாடு

சங்கம் அதன் அனைத்து பணிகளிலும் சிறந்த தரத்தைப் பேணுவதை உறுதிப்படுத்துகிறது.

நாட்டில் உள்ள முன்னணி அரசசார்பற்ற அமைப்பு

இந்த சங்கம் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பில் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பெறுமதிமிக்க இயக்கமாகத் திகழ்கிறது.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By