வஜைனிஸ்மஸ் (யோனி இறுக்கம்) என்றால் என்ன?
வஜைனிஸ்மஸ் (இப்போது பெரும்பாலும் ஜெனிட்டோ-பெல்விக் வலி/ஊடுருவல் கோளாறு என வகைப்படுத்தப்படுகிறது) என்பது இடுப்புத் தள தசைகளை தன்னிச்சையாக இறுக்குவது, இது உட்புகுத்தல் (penetration) வலிமிகுந்ததாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ மாற்றும். இந்நிலை உடலுறவு, மருத்துவ பரிசோதனைகள் அல்லது டாம்போன் பயன்பாட்டை பாதிக்கலாம். இந்த நிலை உடல் அல்லது உளவியல் காரணங்களால் ஏற்படலாம், மேலும் பயனுள்ள சிகிச்சை பொதுவாக உடல் மருத்துவம் (physical therapy), படிப்படையான உணர்ச்சியிழக்கச் செய்வது (gradual desensitization), மற்றும் ஆலோசனை (counseling) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முறையைக் கொண்டுள்ளது.
காரணங்கள்
உடல் ரீதியானது: தொற்றுகள், காயங்கள், ஹோர்மோன் மாற்றங்கள், மாதவிடாய், பிரசவ சிக்கல்கள்
உள ரீதியானது: வலி குறித்த பயம், பதட்டம், கடந்தகால பாலியல் அதிர்ச்சி அல்லது துஷ்பிரயோகம், மன அழுத்தம், உறவு சிக்கல்கள்
அறிகுறிகள்
உடலுறவில் உட்புகுத்தலின்போது வலி, எரிச்சல், அல்லது இறுக்கமான உணர்வு
டாம்போன் உட்செருகுவதில் அல்லது இடுப்பு பரிசோதனைகளின் போது சிரமம்
யோனி பகுதியில் தசைச் சுருக்கம் (muscle spasms)
சிகிச்சை முறைகள்
சிகிச்சை பெரும்பாலும் உடல் மற்றும் உளவியல் அணுகுமுறைகளின் ஒருங்கிணைப்பாக இருக்கும்:
தசைகளை தளர்த்தவும் வலுப்படுத்தவும் உதவும் இடுப்புத் தள உடல் சிகிச்சை
பயம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவும் அறிவியல்-நடத்தைச் சிகிச்சை (CBT) அல்லது ஆலோசனை
யோனி விரிவாக்கிகளை (vaginal dilators) பயன்படுத்தி படிப்படையான உணர்ச்சியிழக்கச் செய்தல் (gradual desensitization)
துணைவர்களுடனும் மருத்துவ நிபுணர்களுடனுமான வெளிப்படையான உரையாடல்கள் மீட்பை எளிதாக்கும்.
எப்போது உதவியை நாட வேண்டும்
பாலியல் உட்புகுத்தலின்போது உங்களுக்கு அசௌகரியம் அல்லது வலி ஏற்பட்டால், ஒரு மருத்துவ நிபுணருடன் ஆலோசிப்பது நிலைமைக்கான காரணத்தை கண்டறியவும், உங்களுக்கு ஏற்ற சிகிச்சைத் திட்டத்தை பெறவும் உதவும்.
எந்தவொரு பாலியல் சுகாதார ஆலோசனைகளுக்கும் 0779552979 என்ற எண்ணில் FPA Sri Lankaவின் Bloomஐ தொடர்பு கொள்ளவும்.