விறைப்புத்தன்மை குறைபாடு (ED) | The Family Planning Association of Sri Lanka

விறைப்புத்தன்மை குறைபாடு (ED)

விறைப்புத்தன்மை குறைபாடு பற்றிய புரிதல்

ED என்பது குறைந்தது 3 மாதங்களுக்கும் மேலாக திருப்திகரமான பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான விறைப்புத்தன்மையைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ தொடர்ந்து இயலாமலிருக்கும் நிலை ஆகும்.இது வயதுடன் அதிகரிக்கும் ஒரு பொதுவான பிரச்சினை, ஆனால் இளம் ஆண்களையும் பாதிக்கக்கூடும். இதுவே சில நேரங்களில் இருதய நோய்கள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளின் ஆரம்ப அடையாளமாக இருக்கலாம் என்பதால், ஆரம்ப கால மருத்துவ பரிசோதனை மிக முக்கியமானது.

பொதுவான காரணங்கள்

உடல் ரீதியானவை: இதய நோய், நீரிழிவு, ஹோர்மோன் ஏற்றத்தாழ்வுகள் (குறைந்த டெஸ்டோஸ்டிரோன்), நரம்பியல் பிரச்சினைகள், மருந்துகளின் பக்க விளைவுகள், புகைபிடித்தல், மது

உள ரீதியானவை: மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, உறவு சிக்கல்கள்

அறிகுறிகள்

  • விறைப்புத்தன்மையை அடைவதில் அல்லது பராமரிப்பதில் சிரமம்

  • பாலியல் ஆசை குறைதல்

  • விந்து வெளியேற்றத்தில் சிக்கல்கள்

நோய் நிலைமையை கண்டறிதல்

ஒரு மருத்துவ நிபுணர் உடல் பரிசோதனை செய்யலாம், மருத்துவ வரலாற்றைப் பரிசீலிக்கலாம், மேலும் அடிப்படை காரணங்களை அறிய ரத்தப் பரிசோதனைகளைக் கோரலாம்.

சிகிச்சை முறைகள்

  • வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி, புகைபிடிப்பதை நிறுத்துதல்

  • உளவியல் காரணங்களுக்காக ஆலோசனை அல்லது சிகிச்சை

  • PDE5 inhibitors (உ+ம்: Viagra) போன்ற மருந்துகள்

  • வெற்றிடப் பம்ப் (vacuum pump) போன்ற சாதனங்கள்

  • சில சந்தர்ப்பங்களில் ஹோர்மோன் மாற்று சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை

ஆரம்பகால மருத்துவ உதவியின் முக்கியத்துவம்

விரைவாக மருத்துவ ஆலோசனை பெறுவது சிகிச்சை வெற்றியளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதோடு பிற மறைமுக உடல்நலப் பிரச்சினைகளையும் கண்டறிய உதவும்.

எந்தவொரு பாலியல் சுகாதார ஆலோசனைகளுக்கு 0779552979 என்ற எண்ணில் FPA Sri Lankaவின் Bloomஐ தொடர்பு கொள்ளவும்.

 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By