வேக (Sprint) கருத்திட்டம் | The Family Planning Association of Sri Lanka

வேக (Sprint) கருத்திட்டம்

இனப்பெருக்க சுகாதாரத்திற்கான ஆகக்குறைந்த முன்னெடுப்பு  சேவைகள் பொதியை (MISP) செயற்படுத்துவதில் உள்ள இடைவெளிகளைப்பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு SPRINT வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவசர சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான முன்னுரிமை நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த இடைவெளி  2004ஆம் ஆண்டு இனப்பெருக்க சுகாதார முகவர்களுக்கிடையிலான பணிக்குழு (IAWG) வினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் அடையாளம் காணப்பட்டது. இந்த அமைப்பு அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், ஏனைய அவசர நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு பாலியல் இனப்பெருக்க சுகாதாரம்பற்றி அறிவிப்பதற்கான வழிகளைக் காட்டுவதை விருத்திசெய்வதற்கு 1995ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. SPRINT முன்னெடுப்பு மனிதாபிமான உதவிகளில் மிக முக்கியமான ஒன்றை வழங்குகின்றது. இது அனர்த்தங்களும் நெருக்கடிகளும் தாக்கமேற்படுத்துகின்றபோது அடிக்கடி மறக்கின்ற விடயமாகும். பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு ஆண்களுக்கு பிள்ளைகளுக்கு கட்டாய உயிர்ப்பாதுகாப்பு சேவைகளை உறுதிப்படுத்துகிறது.

சேவைகள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றபோது அவற்றிற்கு முன்னுரிமையளிக்கப்படாதபோது SPRINT பெண்களுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் நடைமுறைத் தீர்வுகளை வழங்குகின்றது. கர்ப்பம், குழந்தை பிறப்பு, இனப்பெருக்க சுகாதாரம், பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறைகள் என்பவற்றின் பின்னர் செயற்படுவதற்கு மனிதாபிமான பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

அத்தகைய தேவைகளுக்குப் பதிலளிப்பதற்கு அவசர சந்தர்ப்பங்களில் மனிதாபிமான ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு செயலாற்றுவது மட்டுமன்றி SPRINT அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. விழிப்புணர்வூட்டுவது தொடர்பிலும் செயற்படுகிறது இணைப்பாக்கத்தை வலுப்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஆற்றலைக் கட்டியெழுப்புகிறது. SPRINT முன்னெடுப்பின் மையக்கருத்து  உயிர்களைப் பாதுகாப்பதாகும். SPRINT முன்னெடுப்புக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தினால் நிதியுதவியளிக்கப்படுகின்றது. இது சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தினால் (IPPF) முகாமைப்படுத்தப்படுகிறது.

இலக்குகள்

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அவசர தேவைகளை சந்திப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்படட அணுகுமுறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை நிலையங்களை அமைப்பதன் ஊடாக மரணம், மோசமான சுகாதாரம், உடல் ஊனம் என்பவற்றைக் குறைப்பது MSPயின் இலக்காகும்.

தேவைகளும்இடைவெளிகளும்

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்திற்கான தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வதேச சட்டகம்  உறுதிப்படுத்துகிறது. MSP சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆகக் குறைந்த சுகாதார தர கவனிப்பை உறுதிப்படுதத்துகிறது. திறமையான சுகாதார ஊழியர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதிகமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. நெருக்கடியான நேரங்களில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவை தேவையாக உள்ளது. இந்த தேவைகளையும் இடைவெளிகளையும் நிரப்புவதில் SPRINT முன்னணியில் திகழ்கிறது.

SPRINT எவ்வாறுவேலைசெய்கிறது

SPRINT முன்னெடுப்பு நடவடிக்கைகள் அங்கத்துவ சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றிய (IPPF) சங்கங்கள், சுகாதார அமைச்சு (MOH) ஐ.நா முகவர்களுடன் சர்வதேச மற்றும் உள்ளூர் நிவாரண அமைப்புகள் என்பவற்றில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முன்னெடுப்பு UNFPA வின் மனிதாபிமான பதில்கள் கிளை, மற்றும் ஏனைய பிராந்தியங்களுடன் பங்காளராக பிராந்திய அலுவலக செயலகத்தின் தெற்காசிய ஊடாக சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தால் (IPPF) இந்த முன்னெடுப்பு இணைப்பாக்கம் செய்யப்படுகிறது. மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டவுடன் வெற்றிகரமாக அமுல்படுத்தும்போது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் MSP யில் அமைக்கப்படுகின்றன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வுக்கும் மரணத்திற்கும் உடல் ஊனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது.

இலங்கையில் SPRINT செயற்படுத்துவதன் நோக்கம் (2015 ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை ஆரம்ப நிலை)

  1. ஐ.நா முகவர் நிலையங்கள் தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் DRRக்கான அரச பங்காளர்கள் போன்ற பிரதான மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மற்றும் பதிலளிப்பவர்களின் பங்கேற்புடன் பரிந்துரைப்பு கூட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன. அத்துடன் MISP யின் மூலோபாயங்களில் மற்றும்/ அல்லது கொள்கைகளில் சேர்த்துக்கொள்ளுவதற்கு அவசர தயார் நிலையைத் தயாரித்தல்.
  2. மனிதாபிமான செயற்பாடுகளில் ஆகக்குறைந்த ஆரம்ப சேவைகள் பொதி (MISP) யை அமுலாக்குவதை இணைப்பாக்கம் செய்வதற்கு தேசிய ஆற்றலை அதிகரித்தல். அத்துடன் கருத்திட்ட செயற்பாட்டு காலத்தில் ஆகக்குறைந்த ஆரம்ப சேவைப் பொதி (MISP) யைப் பற்றிய தேசிய மட்டத்திலான செயலமர்வொன்றை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
  3. பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் (SRH) மற்றும் (MISP) யை அமுலாக்கல்பற்றி நாட்டில் பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் (SRH) சூழமைவு மதிப்பீடு ஒன்றை நடத்துதல்.
  4. மேலும் காலாண்டு CCT கூட்டத்தின்போது நாட்டின் அவசர தேவைகளை அடிப்படையாகக் கொண்டு CCT பணித்திட்டமும் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது.
  5. அவசர தயார்படுத்தலின் கீழ், SPRINTன் பிரதான ஆக்கக்கூறு என்றவகையில், அரச சுகதார நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார் ஆகியோரின் பாடத்திட்டத்தில் MISPயை சேர்த்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை வரைவுப்படுத்த இலங்கை குடும்பத்திட்ட சங்கம் கூட்டங்களையும் வசதிப்படுத்தல்களையும் நடத்தும்.

மேற் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக, 2016 யூலை மாதமளவில் நாங்கள் 3ஆம் இலக்க நோக்கத்தை மாத்திரம் அடைந்துள்ளோம். ஏனையவை அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளன. (2016 செப்டம்பர் 30ஆம் திகதியளவில்)

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By