பக்டீரியல் வெஜினோசீஸ் | The Family Planning Association of Sri Lanka

பக்டீரியல் வெஜினோசீஸ்

அப்படி என்றால் என்ன?

ஆரோக்கியமான யோனியில் உள்ள சாதாரண பாக்டீரியாக்களின் சமநிலையின்;மை காரணமாக பாக்டீரியல் வஜினோசிஸ் ஏற்படலாம். அதாவது pH நிலை (அமிலம்/கார சமநிலை) சீர்குலைந்துள்ளது. பாக்டீரியல் வஜினோசிஸ் என்பது STI அல்ல.

நீங்கள் அதை எவ்வாறு பெறுவீர்கள்?

யோனி சுத்திகரிப்பு, புதிய பாலுறவு துணைகள் அல்லது அதிகரித்த பாலியல் செயல்பாடு போன்ற யோனியில் மைக்ரோ ஃப்ளோரா பக்டீரியாவின் சமநிலையை மாற்றும் செயற்பாடுகள் பக்டீரியல் வெஜினோசிஸை ஏற்படுத்தும். இருப்பினும் பாலுறவு கொள்ளாத பெண்களுக்கும் இது ஏற்படலாம்.

அதன் அறிகுறிகள் என்ன?

  • துர்நாற்றமுள்ள சாம்பல் கலந்த வெள்ளை நிற யோனி திரவ வெளியேற்றம்
  • பாலுறவுக்குப் பிறகும், மாதவிடாய் நேரத்திலும் துர்நாற்றம் அதிகமாக இருக்கும்
  • அரிப்பு மற்றும் எரிச்சல; BV (பக்டீரியல் வெஜினோசிஸ்) இல் ஒரு பொதுவான அறிகுறி அல்ல

அது எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

மாத்திரைகளை வாய்வழியாக எடுத்துக்கொள்வதன் மூலம் பக்டீரியல் வெஜினோசிஸ் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது மது அருந்தக் கூடாது.

இது எனது துணையை எவ்வாறு பாதிக்கும்?

துணைக்கு சிகிச்சை தேவையில்லை.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By