பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs) | The Family Planning Association of Sri Lanka

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs)

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) என்பது பொதுவாக யோனி, குத மற்றும் வாய்வழி உடலுறவின் பொழுது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு  பரவுகின்ற நோய்த்தொற்றுகளாகும். அவை மிகவும் பொதுவானவை, மேலும் அவை உள்ள பலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. சிகிச்சை எடுக்காமை, பாலியல் ரீதியாக பரவுகின்றநோய்களானது(STDs) கடுமையான உடல்நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதற்கு காரணமாக அமையும். ஆனால் நல்ல செய்தி/ விடயம் என்னவென்றால், பரிசோதிக்கப்படுவது ஒன்றும் பெரிய விடயமல்ல, ஏனெனில் பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு (STDs) சிகிச்சையளிப்பது எளிதாகும்.

In this section :

1.  நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs) தொடர்பான பரிசோதனையை எடுக்க வேண்டுமா?

2.  எனக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களின்(STDs) அறிகுறிகள் இருப்பதாக நினைக்கின்றேன். நான் பரிசோதனையை எடுக்க வேண்டுமா?

3. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை - நான் இன்னும் பரிசோதனை செய்ய வேண்டுமா?

 

1.  நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs) தொடர்பான பரிசோதனையை எடுக்க வேண்டுமா?


 

பெரும்பாலான நேரங்களில், பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) அறிகுறிகள் இருக்காது. உங்களுக்கு ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) இருக்கின்றதா என்பதை உறுதியாக அறிய/உறுதிப்படுத்த ஒரேயொரு வழி பரிசோதனை ஆகும்.  உங்களுக்கு யோனி, குத அல்லது வாய்வழி உடலுறவு போன்ற பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை பரப்பக்கூடிய பாலியல் தொடர்பு இருந்தால் - ஒரு மருத்துவர் அல்லது தாதியரிடம் (nurse) பரிசோதனை செய்வது/ எடுத்துக்கொள்வது  பற்றி பேசுங்கள்.

 

2. எனக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களின்(STDs) அறிகுறிகள் இருப்பதாக நினைக்கின்றேன். நான் பரிசோதனையை எடுக்க வேண்டுமா?

 

நீங்கள் வேறொரு நபருடன் பாலியல் தொடர்பை கொண்டிருந்தால், பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD)  அறிகுறிகளை கண்டால், பரிசோதனை செய்வதை பற்றி ஒரு மருத்துவர் அல்லது தாதியரிடம் (nurse) பேசுங்கள். பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய் (STD) தொடர்பான அறிகுறிகள் காலப்போக்கில் வந்து போகலாம், ஆனால் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய் (STD) போய்விட்டது/ குணமாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) தொடர்பான அறிகுறிகள் உங்களை மிகவும் தொந்தரவு செய்யாத அளவுக்கு இலகுவாக இருப்பது பொதுவானது, ஆனால் நீங்கள் ஏதாவது உணர்கின்றீர்கள் என்றால் நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது தாதியை (nurse)  நாட வேண்டும்.

 

வெவ்வேறு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) வெவ்வேறு அறிகுறிகள் இருக்கின்றன. பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களின் (STDs) அறிகுறிகள் பின்வருமாறு:

●உங்களுடைய பிறப்புறுப்புக்கள், தொடைகள் அல்லது கன்னங்களில் புண்கள் அல்லது புடைப்புகள்

●உங்களுடைய யோனி அல்லது ஆண்குறியிலிருந்து வித்தியாசமான வெளியேற்றம்

●நீங்கள் சிறுநீர் கழிக்கின்ற பொழுது, எரிச்சல் ஏற்படும் மற்றும்/ அல்லது அதிக சிறுநீர் வெளியேறும்

●உங்களுடைய ஆண்குறி, யோனி, வல்வா அல்லது ஆசனவாயில் அரிப்பு, வலி, எரிச்சல் மற்றும்/ அல்லது வீக்கம்

●காய்ச்சல், உடல் வலி, வீங்கியசுரப்பிகள் மற்றும் சோர்வாக இருப்பது, தடிமல் போன்ற அறிகுறி

 

இந்த அறிகுறிகள் அனைத்தும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs)  அல்லாதவற்றால் ஏற்படலாம் (பருக்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்(UTIs) அல்லது ஈஸ்ட் தொற்று போன்றவை). எனவே என்ன நடக்கின்றது என்பதை உறுதியாக அறிய ஒரேயொரு வழி பரிசோதனை ஆகும். உங்களுக்கு என்ன வகையான சோதனை அல்லது சிகிச்சை தேவை என்பதை அறிய உங்களுடைய தாதி (nurse) அல்லது மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.

அவர்களுக்கு இதைப்பற்றி சொல்லுங்கள்:

● உங்களுடைய அறிகுறிகள்

● நீங்கள் எந்த வகையான பாலியல் தொடர்பை கொண்டிருந்தீர்கள்

● (யோனி, குத, அல்லது வாய்வழி உடலுறவு, அல்லது தோலில் இருந்து தோலுக்கு பிறப்புறுப்பு தொடர்பு அல்லது பாலியல் திரவங்களை கடந்து செல்வது போன்றவை)

● நீங்கள் ஆணுறைகளைபயன்படுத்தினாலும்

உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பதாக நீங்கள் நினைத்தால் சோதிக்கப்படுவது மிகவும் முக்கியமாகும், ஏனென்றால் சில பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு (STDs) நீங்கள் சிகிச்சை அளிக்காவிட்டால் அவை கடுமையான உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பது எச்.ஐ.வி(HIV) போன்ற பிற பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருக்கின்றதா என்பதை இப்பொழுதே கண்டறிவது நல்லது, எனவே நீங்கள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதை/பரப்புவதை தவிர்க்கலாம்.

சோதிக்கப்படுவதற்கான யோசனை பயமாக தோன்றலாம், ஆனால் அது செய்யப்பட வேண்டும். மிகவும் பொதுவான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) மருந்து மூலம் எளிதாக குணப்படுத்த முடியும். குணப்படுத்த முடியாத பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) பெரும்பாலும் அறிகுறிகளுடன் உங்களுக்கு உதவுவதற்கும் மற்றும் வேறு எவருக்கும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) பரப்புகின்ற வாய்ப்பை குறைப்பதற்கும் சிகிச்சைகள் இருக்கின்றன. எனவே உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பது எவ்வளவு வேகமாக தெரிய வருகின்றதோ அவ்வளவு வேகமாக உங்களையும் உங்களுடைய துணைகளையும் கவனித்துக் கொள்ளலாம்.

 

3. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை - நான் இன்னும் பரிசோதனை செய்ய வேண்டுமா?


 

நீங்கள் பார்க்கின்ற அல்லது உணர்கின்ற விதத்தில் உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருக்கின்றதா என்று உங்களால் சொல்ல முடியாது - பெரும்பாலான நேரங்களில், பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) உடையவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. எனவே உங்களுக்கு (அல்லது உங்களுடன் இருப்பவர்களுக்கு) பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs)  இருக்கின்றதா என்பதை உறுதியாக அறிய/ உறுதிக்படுத்த ஒரேயொரு வழி பரிசோதனை செய்யப்படுதல் ஆகும்.

 

நீங்கள் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பை கொண்டிருந்தால் அல்லது உங்களுடன் இருப்பவர்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பதை கண்டறிந்தால் சோதிக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். ஒரு மருத்துவரால் அல்லது ஒரு தாதியரால் (nurse) உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) பரிசோதனை செய்ய வேண்டுமா இல்லையா என்று சொல்ல முடியும்.

உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருந்தால், சீக்கிரம் கண்டுபிடிப்பது நல்லது. சில பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) நீங்கள் இப்பொழுது நன்றாக உணர்ந்தாலும் கூட, காலப்போக்கில் கடுமையான பாதகத்தை/சேதத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் உடலுறவு கொள்ளுகின்ற மற்றவர்களுக்கும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) பரவலாம்.

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) சோதனை பெறுவது பற்றிய சிறந்த பகுதி? நீங்கள் அதை முடித்துவிட்டால், அது உண்மையில் உங்களுடைய மனதை நிம்மதியாக்கும். பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கான(STDs) சோதனை என்பது பொறுப்பாக இருப்பதற்கும் உங்களை கவனித்துக் கொள்வதற்கும் ஒரு வழக்கமான பகுதியாகும். கூடுதலாக, பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான சோதனைகள் விரைவாகவும் வலியற்றதாகவும்  இருக்கும்.

Learn More About:

How Do I talk with my Partner about STI

STIS Description

STD Testing

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By