நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை பற்றி என்னுடைய கூட்டாளருடன் எப்படி பேசுவது? | The Family Planning Association of Sri Lanka

நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை பற்றி என்னுடைய கூட்டாளருடன் எப்படி பேசுவது?

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை பற்றி பேசுவது சங்கடமாக உணரலாம், ஆனால் அது முக்கியமானது. பரிசோதிக்கப்படுவதை பற்றி பேசுவது உங்களுடைய கூட்டாளரை பற்றி நீங்கள் அக்கறைப்படுவதை காட்டுகின்றது, அத்தோடு அது உங்கள் இருவரையும் நெருக்கமாக்கும்.

 

In this section :

1. பரிசோதிக்கப்படுவதற்குஎனது கூட்டாளரை நான்எவ்வாறு கேட்பது?

2. எனது பரிசோதனை முடிவுகளை பற்றி எனது கூட்டாளரிடம் எப்படி பேசுவது?

 

1. பரிசோதிக்கப்படுவதற்குஎனது கூட்டாளரை நான்எவ்வாறு கேட்பது?

 

பரிசோதிக்கப்படுவதை பற்றி பேசுவதற்கு சிறந்த நேரமானது நீங்கள் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு முன்பு (வாய்வழி உடலுறவு உட்பட) ஆகும். ஒரு புதிய கூட்டாளருடன் பரிசோதிக்கப்படுவது என்பது மிகவும் முக்கியமானது அத்தோடு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) தடுப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது..

உரையாடலில் கொஞ்சம் சங்கடமாக உணர்வது முற்றிலும் இயல்பானது, ஆனால் நீங்கள் அதை பேசி முடித்தவுடன் நன்றாக உணர்வீர்கள். அத்தோடு உங்களுக்கு தெரியாது – நீங்கள் அதை பற்றி பேசுவதில் உங்களுடைய கூட்டாளர் மகிழ்ச்சியடையக் கூடும்.

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) பரிசோதனை எடுப்பது என்பது உங்களுடைய கூட்டாளரை ஏமாற்றுவதோ அல்லது நம்பாததோ அல்ல. மக்களுக்கு பல வருடங்களாக தெரியாமலேயே ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) இருக்கமுடியும் – பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) உள்ளவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இருக்காது, மற்றும் ஒருவருக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) இருக்கின்றதா என்பதை உறுதியாக அறிவதற்கான ஒரே வழி பரிசோதிப்பதாக இருக்கின்றது. எனவே ஒழுங்காக பரிசோதனை செய்வது அர்த்த முள்ளதாக இருக்கும். நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை அத்தோடு அவர்களுடைய ஆரோக்கியத்தை பற்றி அக்கறைப்படுவதால் தான் நீங்கள் சோதிக்கப்பட வேண்டும் என்று கூறலாம்.

உரையாடலை தொடங்குவதற்கான சில வழிகள் இங்கே இருக்கின்றன:

  • இதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கின்றது, ஆனால் நான் உன்னில் அக்கறைப்படுகின்றேன் அத்தோடு இது முக்கியம் என்றும் நான் நினைக்கிறேன். பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) ஒன்றாகச் சேர்ந்து பரிசோதிக்கப்படுவது பற்றி நீ எப்படி உணர்கின்றாய்?

  • அதாவது, நான் கடந்த மாதம் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs)  பரிசோதிக்கப்பட்டேன், அத்தோடு எனக்கு எதுவும் இல்லை. நீ எப்போதாவது பரிசோதிக்கப்பட்டிருக்கின்றாயா? நாங்கள் ஒருவருக்கொருவரை கவனித்துக் கொள்கின்றோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  • நேர்மையாக இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன், எனவே கடந்த மாதம் நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs) பரிசோதனை செய்ததில் எனக்கு கிளமிடியா(chlamydia) இருப்பதை கண்டுபிடித்தேன் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் மருந்து எடுத்துக் கொண்டேன், அத்தோடு எனக்கு அது இனிவராது. ஆனால் அது பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) எவ்வளவு பொதுவானவை என்பதை எனக்கு காட்டியது. நீங்கள் எப்போதாவது பரிசோதிக்கப்பட்டிருக்கின்றீர்களா?

பரிசோதிக்கப்படுவது என்பது உங்களுக்கு ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) இருக்கலாம் என்கிற எண்ணத்தை எதிர்கொள்வதாகும். ஆனால் நீங்கள் பரிசோதிக்கப்பட்டவுடன், நீங்கள் இனி அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற ஒரு நோய்(STD) உள்ளது என்பதை விரைவில் நீங்கள் அறிவீர்கள், அது சிறந்தது: பல பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) எளிதில் மருந்து மூலம் குணப்படுத்த முடியும். குணப்படுத்த முடியாத பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கான(STDs) அறிகுறிகளுக்கு உதவுகின்ற மற்றும் உங்களுடைய கூட்டாளருக்கு கொடுக்கின்ற வாய்ப்புக்களை குறைக்கக்கூடிய சிகிச்சைகளும் இருக்கின்றன. 

நீங்களும் உங்களுடைய கூட்டாளரும் ஒன்றாக பரிசோதிப்பது என்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கின்றது, அதனால் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியும். உங்களுடைய கூட்டாளர் பரிசோதிக்காவிட்டால், நீங்கள் இது உங்களுக்கு சரியான உறவாக இருக்குமா என்று சிந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களுக்கு உதவாத ஒருவர் உறவொன்றை வைத்துக்கொள்வதற்கு சிறந்த நபராக இருக்க முடியாது.

 

2. எனது பரிசோதனை முடிவுகளை பற்றி எனது கூட்டாளரிடம் எப்படி பேசுவது?


 

நீங்கள் டேட்டிங் செய்யும் நபரிடம் உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) ஒன்று இருப்பதாக சொல்வது வேடிக்கையானது அல்ல. ஆனால் அதை செய்வது சரியான விஷயம், அத்தோடு அது அவர்களுக்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றது. உங்களுடைய கடந்தகால/ முன்னால் கூட்டாளர்களிடம் சொல்வது மிகவும் முக்கியமானது, அதனால் அவர்களும் பரிசோதிக்கப்படலாம்.

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) பற்றி உங்களுடைய கூட்டாளர்களுடன் பேச சரியான வழியில்லையென்றால், உதவக்கூடிய சில அடிப்படை குறிப்புக்கள் இங்கே இருக்கின்றன:

 

அமைதியாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள் அத்தோடு இதை நீங்கள் மட்டும் கையாளவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமைதியான, நேரான அணுகுமுறையுடன் உரையாடலுக்கு செல்வதற்கு முயற்சிசெய்யுங்கள். பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs)  இருப்பது வெறுமனே ஒரு சுகாதாரப் பிரச்சினையாக இருக்கின்றது, அத்தோடு அது ஒரு நபராக உங்களைப் பற்றி எதுவும் அர்த்தப்படுத்தாது.

உங்களுடைய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.  பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs)  பற்றிய நிறைய கட்டுக்கதைகள் இருக்கின்றன, எனவே உண்மைகளை படித்து உங்களுடைய கூட்டாளருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருங்கள். உங்களுடைய பாலியல் ரீதியாக பரவுகின்ற நோயை(STD) குணப்படுத்துவதற்கு அல்லது சிகிச்சையளிப்பதற்கு உதவுகின்ற மருந்துகள் உள்ளன என்பதை உங்களுடைய கூட்டாளருக்கு தெரியப்படுத்துங்கள். ஆணுறையை பயன்படுத்துவதன் மூலமான பாதுகாப்பான உடலுறவானது, உங்களுடைய கூட்டாளரை பாதுகாப்பதற்கும்உதவும். 

நேரத்தை பற்றி சிந்தியுங்கள். நீங்கள் திசை திருப்பப்படாத அல்லது குறுக்கிடப்படாத நேரத்தை தேர்ந்தெடுத்து, தனிப்பட்ட மற்றும் நிதானமான இடத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் பதட்டமாக இருந்தால், சத்தமாக நீங்களாகவே அல்லது நீங்கள் நம்புகின்ற நண்பருடனோ பயிற்சி செய்யலாம். இது விசித்திரமாக தோன்றலாம், ஆனால் வார்த்தைகளை சொல்வதை பயிற்சி செய்வது, நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என்பதை கண்டறியவும், அத்தோடு உங்களுடைய கூட்டாளருடன் பேசுகின்ற பொழுது அதிக நம்பிக்கையாக உணரவும் உதவுகின்றது.

முதலில் பாதுகாப்பு.  உங்களுடைய கூட்டாளர் உங்களை காயப்படுத்தலாம் என்று நீங்கள் பயப்படுகின்றீர்கள் என்றால், நீங்கள் ஒரு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்பை பெறுவது நல்லது.
உங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்தால், +94 76 588 4881 ஐ அழையுங்கள்.

உங்களுடைய கூட்டாளருடன் பேசுகின்ற பொழுது பழிபோடுகின்ற விளையாட்டை விளையாடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உறவின் பொழுது உங்களில் ஒருவர் நேரான பரிசோதனை முடிவை பெற்றால், யாராவது ஏமாற்றினார்கள் என்று தானாகவே அர்த்தம் கிடையாது. ஒரு பரிசோதனையில் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தென்படுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், அத்தோடு பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. அதனால் நிறைய பேருக்கு நீண்ட காலமாக (வருடங்கள் கூட) தெரியாமலேயே பாலியல் ரீதியாக பரவுகின்ற ஒரு நோய்(STD) இருக்கின்றது, அத்தோடு அது எப்போது, எப்படி ஒருவருக்கு வந்தது என்று சொல்வது கடினமாக இருக்கும்.மிகமுக்கியமானவிடயம்என்னவென்றால், நீங்கள்இருவருமேபரிசோதிக்கப்படுவீர்கள். உங்களில்ஒருவருக்குமட்டுமே பாலியல்ரீதியாகபரவுகின்றஒரு நோய்(STD) இருக்குமானால், மற்றவரை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பது பற்றி பேசுங்கள்.

உங்களுடைய கூட்டாளர் எப்படி நடந்து கொள்வார் என்று கவலைப்படுவது இயல்பானதாக இருக்கின்றது. இயல்பாக இருக்கின்ற விடயங்களை செயலாக்குவதற்கு உங்களுடைய கூட்டாளருக்கு சிறிது நேரத்தையும் இடத்தையும் கொடுக்க வேண்டியிருக்கும். தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகளை பற்றியும் அவர்கள் அவர்களுடைய வைத்தியரிடம் பேச முடியும். இறுதியில், உரையாடலானது உங்களை இன்னும் நெருக்கமாக்கலாம்.

 

Learn More About:

STD- Get Tested

STIS Description

STD Testing

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By