முன்கூட்டியே விந்து வெளியேற்றம் என்றால் என்ன?
முன்கூட்டியே விந்து வெளியேற்றம் (PE) என்பது, உடலுறவில் ஈடுபடும் பொழுது சாதாரணமாக ஒரு நிமிடத்திற்குள் அல்லது எதிர்பார்த்ததை விட மிக விரைவாக விந்து வெளிவருதலாகும். இது தனிப்பட்ட மற்றும் உறவு சார்ந்த மனஅழுத்தம் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
PE வகைகள்
இயல்பிலேயே வாழ்நாள் முழுவதும் இருப்பது(Lifelong): முதல் பாலியல் அனுபவங்களிலிருந்தே காணப்படும்.
இயல்பிலின்றி பின்னர் உருவாகும் (Acquired): உடல் அல்லது உளவியல் காரணங்களால் பின்னர் ஏற்படுகிறது.
சாத்தியமான காரணங்கள்
உளவியல்: பதட்டம், மன அழுத்தம், உறவு சிரமங்கள்
உயிரியல்: ஹோர்மோன் சமநிலையின்மை, நரம்பியல் பிரச்சினைகள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்க்குழாய் வீக்கம்
அறிகுறிகள்
மிகக் குறைந்த தூண்டுதலிலேயே விந்து வெளிவருதல்
விந்து வெளியேறுவதை தாமதப்படுத்த இயலாமை
தன்னைப்பற்றிய அல்லது தனது துணை குறித்த எதிர்மறை உணர்வுகள்
ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை
நடத்தை முறைகள்: ‘Stop-Start’ முறை மற்றும் ‘Squeeze’ முறை போன்ற நுட்பங்கள்
உணர்ச்சி சார்ந்த காரணங்களை சமாளிக்க ஆலோசனை அல்லது பாலியல் சிகிச்சை.
துணைவருடனும் மருத்துவருடனும் வெளிப்படையான தொடர்பாடல்
தாமதப்படுத்துவதற்கு - மாத்திரைகள்/கிரீம்/ஜெல்/ஆணுறைகள்-ஸ்டாமினா
முன்னேற்றம்
பல ஆண்கள் சமீபத்திய சிகிச்சைகளின் மூலம் முன்னேற்றத்தை காண்கிறார்கள் மற்றும் விந்து வெளியேறும் நேரத்தை கட்டுப்படுத்தும் திறனைக் அதிகரித்துள்ளார்கள் .
எந்தவொரு பாலியல் சுகாதார ஆலோசனைகளுக்கு 0779552979 என்ற எண்ணில் FPA Sri Lankaவின் Bloomஐ தொடர்பு கொள்ளவும்.