மூலோபாய கட்டமைப்பு | The Family Planning Association of Sri Lanka

மூலோபாய கட்டமைப்பு

சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தின் IPPF சுறுசுறுப்பான, பெறுபேறுகளை-நோக்கமாகக் கொண்டுள்ள அங்கத்துவ சங்கம் என்ற வகையில், இலங்கை குடும்பத்திட்ட சங்கம் சவால்களை வென்று முன்னேறும். உலக மூலோபாய சட்டகத்திலிருந்து பணிப்புரையைப் பெற்று 2016-2022ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான எமது சொந்த மூலோபாயத்திட்டத்தை உருவாக்குவதற்கு ஒரு தொடர் கலந்துரையாடலை நாம் நடத்தினோம். நாம் எதிர்பார்த்தவாறே இது தொண்டர்களுக்கும் எமது பணியாளர்களுக்கும் இணக்கத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைமுறையாக இருந்தது. அத்துடன் இது எமது எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. அதன் விளைவாக தெளிவான திசையில் கவனமாக அணுகுவதற்காக எமது தொலைநோக்கு, செயற்பணி மற்றும் விழுமியங்கள் மீளாய்வு செய்யப்பட்டு சீராக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் என்பவற்றுடன் தொடர்புடையதாக எமது நாட்டு சூழ்நிலையை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் மூலோபாய திட்டத்தின் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் மத்தியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் காரணமாக அந்த நிலைமையின் எதிர்வுகூறமுடியாத தன்மை உயர்வடைந்தது. பரிந்துரைப்பு மற்றும் சேவைகள் ஆகிய விடயத்தில் நாம் அடையக்கூடியவை பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) அரசாங்கத்தின் எதிர்பார்ப்பின் மீது நேரடியாகத் தங்கியிருந்தது என்பது மிகத் தெளிவான விடயமாகும். அத்துடன் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுகளுடன் நாம் இன்றுவரை இணக்கப்பாட்டுடன் நன்னம்பிகையுடன் வேலை செய்கிறோம்.

இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தைச் சேர்ந்த நாம், அடுத்துவரும் ஏழு ஆண்டுகளில் எமது மூலோபாய நோக்கத்தை யதார்த்த பூர்வமானதாக்குவதற்கு வழமையான ஈடுபாட்டுடன் அர்பணிப்புடன் செயலாற்றுவோம் என் உறுதிப்பிரமாணம் செய்கிறோம்.

பயன் 01 :-

பாலியல்மற்றும்இனப்பெருக்கஉரிமைகள்மற்றும்பால்நிலைசமத்துவம்என்பவற்றைஇலங்கை அரசாங்கம்மதிக்கிறது, பாதுகாக்கிறதுமற்றும்நிறைவேற்றுகிறது.

முன்னுரிமைநோக்கம் 01 :-

  • பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் சம்பந்தமாக தகவலறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு வலுவூட்டுகின்ற அதே நேரத்தில் இளம் வயதினர் அனைவரும் தமது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளைப்பற்றி அறிந்துகொள்ளுவதை உறுதிப்படுத்துதல்.

முன்னுரிமைநோக்கம் 02 :-

  • மாற்றத்திற்கான பரிந்துரைப்பவர்களாக பெண்களையும் இளம் தலைவர்களையும் ஈடுபடுத்துதல்.
பயன் 02 :-

 17.15 மில்லியன் மக்கள் அவர்களுடைய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் பற்றி சுதந்திரமாக செயலாற்றுதல்.

முன்னுரிமைநோக்கம் 01 :-

  • எல்லாவற்றையும் உள்ளடக்கிய பாலியல் கல்வி மற்றும் அவர்களுடைய பாலியல் உரிமைகள் என்பவற்றை அடைவதற்கு இளம் வயதினருக்கு ஆற்றளித்தல்.

முன்னுரிமைநோக்கம் 02 :-

  • சுகாதாரம், தேர்வு மற்றும் உரிமைகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கு ஊடகம், கருத்து - உருவாக்குகின்றவர்கள், வீரமுதன்மையாளர்கள் ஆகியோரை ஈடுபடுத்துதல்.
பயன் 03 :-

6.12 மில்லியன் தரம் ஒருங்கிணைக்கப்பட்ட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னுரிமைநோக்கம் 01 :-

  • கருச்சிதைவு உளவளத்துணை மற்றும் Hiv உட்பட உரிமைகள் அடிப்படையிலான சேவைகளை வழங்குதல்.

முன்னுரிமைநோக்கம் 02 :-

  • அரசாங்க மற்றும் தனியார் சுகாதார சேவைகள் வழங்குநர்கள் ஊடாக சேவைகளைப் பெறக்கூடியதாக இருத்தல்.
பயன் 04 :-

உயர்செயலாற்றுகை, நம்பகத்தன்மைமற்றும்ஐக்கியசங்கம்.

முன்னுரிமைநோக்கம் 01 :-

  • செயற்பாட்டு நற்பயன் மற்றும் இரட்டை நிறுவன வருமானம்.

முன்னுரிமைநோக்கம் 02 :-

  • எமது தொண்டர்கள் மற்றும் செயற்பாட்டு ஒத்துழைப்பாளர்கள் அடிப்படையை வளர்த்தல்.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By