கூபக அழற்சி நோய | The Family Planning Association of Sri Lanka

கூபக அழற்சி நோய

PID என்றால் என்ன?

கூபக அழற்சி நோய;; (PID) என்பது இனப்பெருக்க தொகுதியில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். பெண்; பிறப்புறுப்பு மேல் பகுதி.

சிகிச்சையளிக்கப்படாத பாலியல் தொற்று நோய்கள் மற்றும் பாலியல் மூலம் பரவா  தொற்றுகளான அனபோரிக் பக்டீரியா போன்றவைகள் யோனி மற்றும் கருப்பை வாயில் இருந்து கருப்பை மற்றும் பலோபியன் குழாய்களுக்கு பரவும்போது இது ஏற்படலாம;.  PID வீரியமானதுடன் இது கருவுறாமையை ஏற்படுத்தும;.

உங்களுக்கு அது எவ்வாறு பரவக்கூடும்?

கிளமிடியா அல்லது கொனோரியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றை (STI) ஒருவர் கொண்டிருப்பதாலும் அதன் பரவுதலினாலும; PID உருவாகுவதற்கான காரணம் ஆகின்றது.

கருப்பையக கருத்தடை சாதனம் (IUD)  பெருத்தப்பட்ட பிறகு அல்லது கருக்கலைப்புக்குப் பிறகு PID ஐப் பெறுவது சாத்தியமாகும். உங்கள் யோனியில் உள்ள சாதாரண பக்டீரியாவும் PID யை ஏற்படுத்தலாம;.

அறிகுறிகள் என்ன?

  • அடி வயிற்றில் அல்லது முதுகில் வலி
  • பாலுறவின் போது வலி
  • காய்ச்சல;
  • வெவ்வேறு வெளியேற்றம்
  • கடுமையான அல்லது வலிமிகுந்த மாதவிடாய்கள;
  • பாலுறவுக்குப் பிறகு அல்லது மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு

இருப்பினும், அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.

அது எவ்வாறு சிகச்சையளிக்கப்படுகிறது? 

  • உங்களுக்கு PID இருப்பதாக மருத்துவர் நினைத்தால், அவர்கள் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின; (antibiotics) கலவையைக் கொடுப்பார்கள். நீங்கள் குணமடைந்ததாக உணர ஆரம்பித்தாலும், அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் முறையாக உட்கொள்வது முக்கியம்.
  • நீங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொள்ளும்போது பாலுறவு கொள்ள வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
  • நீங்கள் மீண்டும் பாலுறவு கொள்வதற்கு முன் உங்கள் துணைவரும; STI பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும், இல்லையெனில் நீங்கள் மீண்டும; STI யைப் பாதிக்கப்படலாம். 
  • உங்களுக்கு ஒருமுறைக்கு மேல; PID பரவியிருந்தால்;, அது மலட்டுத்தன்மையை (கர்ப்பம் பெறுவது கடினம்), எக்டோபிக் கர்ப்பம் (பலோபியன் குழாய்களில்) அல்லது நீண்ட கால வலியை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.

இது துணையை/ களை எவ்வாறு பாதிக்கும்?

உங்களிடம; PID இருந்தால; STI பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெறுவது குறித்து உங்கள் துணையிடம் பேச வேண்டும்.

எதிர்காலத்தில் நான் அதைப் பெறுவதை எப்படி தடுப்பது?

  • பாதுகாப்பான பாலுறவைக் கடைப்பிடிக்கவும். ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும். உங்கள் துணைகளின் எண்ணிக்கையை மட்டுப்படத்தவும் மற்றும் துணையின் பாலியல் உறவுகள் குறித்த  வரலாற்றைப் பற்றி கேட்கவும;.
  • நீங்களும் உங்கள் பாலியல் தணைகளும் வழக்கமான STI பரிசோதனைகள் மற்றும் தேவைப்பட்டால் சிகிச்சை பெறுவதை உறுதி செய்து கொள்ளவும;.


அருகிலுள்ள FPA கிளினிக்கைக் கண்டறிய: https://www.fpasrilanka.org/find-a-clinic

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By