இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மனதாபிமான உதவிகளைச் செய்தல். (மே - ஆகஸ்ட் 2016) | The Family Planning Association of Sri Lanka

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மனதாபிமான உதவிகளைச் செய்தல். (மே - ஆகஸ்ட் 2016)

இலங்கையில் கொழும்பு, கம்பஹா, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆகக் குறைந்த முன்னெடுப்பு சேவைகள் திர்வுப்பொதி (MISP) ஊடாக மனிதாபிமான உதவிகளைச் செயற்படுத்துதல். 2016ஆம் ஆண்டு மே மாதம் அடைமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரகாரம் (DMC) ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தின் (IPPF) தெற்காசிய பிராந்தியத்தின் (SAR) SPRINT II கருத்திட்டத்தை இலங்கை குடும்பத்திட்ட சங்கத்துடன் இணைந்து முன்னெடுத்தது. இது 2015ஆம் ஆண்டில்  தெற்காசிய  பிராந்திய சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தின் (IPPF) அங்கத்துவ சங்கமாக இருந்தது. SPRINT, MISP கையிருப்புகளை முன்னிலைப்படுத்திக்கொள்ளுதல், நெருக்கடிகளின்போது பாலியல் இனப்பெருக்க சுகாதார குழுவை அமைத்தல் போன்ற  தயார் நிலைகளை முன்னெடுத்தது. இதில் உலக சுகாதார அமைப்பு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், சுகாதார அமைச்சு என்பவற்றின்  பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர்.  நாட்டின் மூலோபாய நடவடிக்கைகளை தயார்படுத்துவதற்கும் திட்டமிடுவதற்கும் குழு ஒழுங்காகக் கூடுகிறது. SPRINT, MISP தயார்படுத்தலையும் அவசரகால நிலைக்கு இலங்கை பதிலளிப்பதற்கிருக்கும் ஆற்றலையும் துரிதமாக மதிப்பீடு செய்கிறது. சுகாதார அமைச்சு அனர்த்த முகாமைத்துவ நிலையம்,  செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகள் கலந்துகொண்ட தேசிய மட்டத்திலான MISP கூர் உணர்வு நிகழ்வின்போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உத்தியோகபூர்வமாக  அனர்த்த முகாமைத்துவத்தின் தேசிய கொள்கைகள் மற்றும் கற்கை நடைமுறையுடன் MISPயை ஒருங்கிணைப்பதற்கு ஏனைய பங்காளர்களுடன் வேலை செய்வதற்கு உத்தியோகபூர்வமாகக் கேட்டது. மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு அமைவாக, முதல்முறையாக சுகாதார அமைச்சு MISP சேவைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கு இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தைக் கேட்டுக்கொண்டது.  அதனால் சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) SPRINT மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் MISPயை இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் ஊடாக நான்கு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தும்படி முன்மொழிந்தது. அந்த இலக்கு மாவட்டங்கள் கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, புத்தளம் என்பவையாகும். சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் IPPF -SPRINT இலங்கை குடும்பத்திட்ட சங்கம், சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்பவற்றின்  கூட்டிணைந்த  முன்னெடுப்பு இதற்கான பதிலாக அமைந்தது. உத்தேச பதிலில் தாய்மைக்கு முந்திய, தாய்மைக்குப் பிந்திய, தாய்ப் பாதுகாப்பு, HIV ஆகிய பரிசோதனைகள் அரச சிகிச்சை நிலையங்களுடன் சேர்ந்து இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான ஏற்பாடுகள்  சேர்த்துக்கொள்ளப்பட்டன.  HIV/STI, குடும்பத்திட்டம், உளவியல் சமூக மற்றும் சமூக கவனிப்பும் ஒத்துழைப்பும் என்பவைபற்றிய விழிப்புணர்வு தொடர்கள் சமூகத்திற்கு வழங்கப்படும். கௌரவ பொதிகளை/ கருத்தடை மாத்திரைகளை விநியோகித்தல், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) முகாமைப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், STI சிகிச்சை மற்றும் அவசர கர்ப்பிணித் தாய்மார் கவனிப்பு, (EmOC) சேவைகள் என்பவையும் வழங்கப்படும். இலங்கை குடும்பத்திட்ட சங்க பணியாளர்கள், கருத்திட்ட தொண்டர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற சேவை வழங்குநர்களுக்கு கருத்திட்டத்தின் நிலைபேறான தன்மையையும் தரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு MISP மீதான பயிற்சித் தொடர்கள் நடத்தப்படும்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பாக கிராமிய மட்டத்தில்  அனர்த்த உதவி அணிக்கும் பயிற்சி நடத்தப்படும். DFAT நிதியுதவியின் கீழ் பின்வரும் சேவைகளை வழங்கி ஆகக் குறைந்த சேவைப்பொதி (MISP) ஏற்பாடுகள் மீது கவனம் செலுத்தும்.

  • கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் முகவர் நிலையங்களுக்கு இடையிலான துரித மதிப்பீட்டுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையதிற்கு (DMC) உதவும்.
  • பாலியல் வன்முறைகளின் விளைவுகளைத் தடுத்தல் மற்றும் முகாமைப்படுத்தல்.
  • STI உட்பட HIV பரிமாற்றலைக் குறைத்தல்.
  • தாய்மார் மற்றும் மகப்பேற்றுக்குப் பின் ஏற்படும் மரணங்களைத் தடுத்தல்.
  • நிலைமைகள் அனுமதிக்குமானால் அரம்ப சுகாதார கவனிப்புடன் ஒருங்கிணைத்து அனைத்தையும் உள்ளடக்கி பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார ஏற்பாடுகளைத் திட்டமிடல்.
  • மேலதிக முன்னுரிமைகள் - குடும்பத்திட்டம் பற்றி விழிப்புணர்வூட்டும் தொடர்கள்.

முலைக்காம்பு பரிசோதனை, மார்பக புற்றுநோய், குருதி குளுக்கோஸ் மற்றும் ஹோமோகுளோபின் மருத்துவ பரிசோதனை, தரை விரிப்புகளை விநியோகித்தல், செருப்புகள், துப்புரவேற்பாட்டு கழிவுகளைப்போடும் தொட்டிகள் மற்றும் பெண்களுக்கான மழை அங்கி ஆகியவற்றை விநியோகித்தல்.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By