அவசர கருத்தடை மாத்திரை | The Family Planning Association of Sri Lanka

அவசர கருத்தடை மாத்திரை

விபத்துக்கள் நடப்பதுண்டு. அதற்காகத்தான் அவசர கருத்தடை – பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின்பு 5 நாட்கள் வரை கர்ப்பத்தை தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழி இருக்கின்றது. ஒரு வழக்கமான கருத்தடை முறையாக பயன்படுத்தப்படக் கூடாது. அவைகள் எச்ஐவி(HIV) மற்றும் எஸ்டிஐ(STIs) களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்காது.

 

In this section :

1. அவசர கருத்தடையானது எப்பொழுது பயன்படுத்தப்பட வேண்டும்?

2. என்ன வகையான அவசர கருத்தடை எனக்கு சிறந்ததாக இருக்கின்றது?

 

1. அவசர கருத்தடையானது எப்பொழுது பயன்படுத்தப்பட வேண்டும்?


 

கர்ப்பத்தை தடுப்பதற்கு நீங்கள் அவசர கருத்தடையை  பயன்படுத்தலாம்:

• நீங்கள் யோனி வழியான உடலுறவு கொள்கின்ற பொழுது ஒரு ஆணுறை அல்லது பிற கருத்தடை முறையை பயன்படுத்தவில்லை என்றால்.
• உங்களுடைய வழக்கமான குடும்ப கட்டுப்பாடு முறையில் நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால் (உங்களுடைய பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுப்பதற்கு, அல்லது சரியான நேரத்தில் உங்களுடைய ஷாட்டை பெறுவதற்கு மறந்தால்) அத்தோடு யோனி வழியான உடலுறவை வைத்துக் கொண்டால். 
• விந்து வெளியேறுதலின் (கம்மிங்-cumming) பின்பு உங்களுடைய ஆணுறை கிழிந்தால் அல்லது வழுக்கிப்போனால்/ நழுவிப்போனால்.
•உங்களுடைய கூட்டாளர் சரியான நேரத்தில் வெளியே எடுக்கவில்லை என்றால். 
•நீங்கள் பாதுகாப்பற்ற யோனி வழியான உடலுறவை வைத்துக் கொள்வதற்கு வற்புறுத்தப்பட்டால். 
• நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவை வைத்துக்கொண்ட பின்பு அவசர கருத்தடையை சரியாக பயன்படுத்தினால், அது நீங்கள் கர்ப்பமாவதற்கான வாய்ப்பை குறைக்கின்றது.


 

2. என்ன வகையான அவசர கருத்தடை எனக்கு சிறந்ததாக இருக்கின்றது?


  • அவசர கருத்தடை மாத்திரை – பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின்பு அவசர கருத்தடையை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு 72 மணித்தியாலங்கள் இருக்கின்றன. எவ்வளவு விரைவில் எடுத்துக் கொள்கின்றீர்களோ அவ்வளவு விரைவில் நன்றாக வேலை செய்யும்.
• ஐயுடி(IUD) (கொப்பர்) - பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின்பு 5 நாட்களுக்குள் செருகுதல்/ உட்செலுத்துதல். இது 99% பயனுள்ளதாகும். இது குறிப்பாக ஒரு நீண்டகால கருத்தடை முறையை விரும்புகின்ற பெண்களுக்கு பொருத்தமானதாக இருக்கின்றது.
• குறைந்த அளவு ஒசிபி(OCP) மிதுரி(Mithuri) - முதல் நான்கு மாத்திரைகளை விரைவிலும் அத்தோடு முதலாவது அளவை எடுத்து 12 மணித்தியாலங்களுக்கு பின்பு மற்ற 4 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளுதல். பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பின்பு 72 மணித்தியாலங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 24 மணித்தியாலங்களுக்குள் எடுத்துக்கொண்டால், தோல்வியுறுகின்ற விகிதம் குறைவாகும். இந்த மாத்திரைகள் கர்ப்பத்திற்கு எதிரான 90% பாதுகாப்பை வழங்குகின்றன.  


 
இசிபி(ECP) பற்றிய மேலதிக தகவல்களுக்கு: http://www.fpasrilanka.org/content/postinor-1



Other Topics:

கருத்தடை ஊசி

ஆணுறைகள்

உள்வைப்பு

வாய்வழி கருத்தடை மாத்திரை

ஐயூடி (IUD)


 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By