புற்றுநோய் பரிசோதனை மற்றும் நோயறிதலின் போது உணர்வு ரீதியான மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு | The Family Planning Association of Sri Lanka

புற்றுநோய் பரிசோதனை மற்றும் நோயறிதலின் போது உணர்வு ரீதியான மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு

உங்கள் மனநலமும் முக்கியமானது

  1. புற்றுநோய் பரிசோதனை குறித்து கவலைப்படுவது இயல்பானதா?

ஆம். பாப் ஸ்மியர்(pap smear), மேமோகிராம் அல்லது மருத்துவப் பரிசோதனைக்கு முன்பு பலர் பதற்றமாக உணர்கிறார்கள். பரிசோதனை செய்யும் போது ஏற்படும் வலி, பரிசோதனை முடிவுகள் அல்லது நோயறிதல் பற்றிய பயம் பொதுவானது. இருப்பினும், பரிசோதனை என்பது ஒரு தடுப்பு நடவடிக்கையாகும். இது புற்றுநோய் உருவாகும் முன்பே, பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.

  1. முடிவுகளைப் பற்றி நான் பயந்தால் என்ன செய்வது?

கவலைப்படுவது இயல்பானது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:

  • பெரும்பாலான பரிசோதனை முடிவுகள் இயல்பானவை.
  • ஒரு அசாதாரண முடிவு எப்போதும் புற்றுநோயைக் குறிக்காது.
  • பல ஆரம்ப மாற்றங்களுக்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும்.


முன்கூட்டியே அறிந்துகொள்வது உங்களுக்கு அதிக வாய்ப்புகளையும் சிறந்த விளைவுகளையும் வழங்குகிறது.

  1. இந்த நேரத்தில் மன அழுத்தத்தை நான் எவ்வாறு சமாளிப்பது?

பின்வருவனவற்றைச் செய்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்:

  • நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் வெளிப்படையாகப் பேசுங்கள்
  • உங்கள் சுகாதார வழங்குநரிடம் உங்களுக்கிருக்கும் கேள்விகளைக் கேளுங்கள்
  • ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள்
  • பதட்டம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவைத் தேடுங்கள்
     

உணர்வு ரீதியான உளநலம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

  1. எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் என்ன செய்வது?

நோய் கண்டறிதல் என்பது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். பின்வருவனவற்றைச் செய்வது முக்கியம்:

  • தகவலை உள்வாங்கிக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
  • தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களுடன் பேசுங்கள்.
  • சிகிச்சை முறைகளைப் பற்றித் தெளிவாக கலந்துரையாடுங்கள்.
  • உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான ஆதரவைத் தேடுங்கள்.
     

இதை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.

  1. இலங்கை குடும்பத்திட்டமிடல் சங்கம் (FPA ஸ்ரீலங்கா) எனக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

FPA ஸ்ரீலங்கா இரகசியமான வழிகாட்டுதல், ஆலோசனை ஆதரவு மற்றும் பொருத்தமான மருத்துவப் பராமரிப்புக்கான பரிந்துரைகளை வழங்குகிறது. எங்கள் குழு உங்கள் உடல் மற்றும் உள நலத்திற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது.

076 588 4881 / 076 588 4882 எனும் இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்தியோ வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்புகொள்ளவோ முடியும்.
 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By