விரைவாக விந்து வெளியேறுகிறதா? அதன் பொருள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உடலுறவு என்பது இருவருக்கும் பொதுவான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்க வேண்டும். ஆனால் பல தம்பதிகளுக்கு பாலியல் ரீதியான கவலைகள் உள்ளன. ஆண்கள் மிக விரைவாக உச்சக்கட்டத்தை அடைவது (விரைவாக விந்து வெளியேற்றுதல்) ஏமாற்றம், சங்கடம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இது "முன்கூட்டிய விந்துதள்ளல்/ முன்கூட்டிய விந்து வெளியேற்றம்" (PE) என்று அழைக்கப்படுகிறது. இது உலகளவில் மிகவும் பொதுவான பாலியல் ரீதியாக முகம் கொடுக்கும் சவால்களில் ஒன்றாகும். உலகளவில் சுமார் மூன்று ஆண்களில் ஒருவர், தாம் இந்த அனுபவத்தைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.
முன்கூட்டிய விந்துதள்ளல் (PE) என்பது ஒருவர் விரும்பியதை விட விரைவாக உச்சக்கட்டத்தை அடைவதாகும். அதாவது: முதல் உடலுறவிலிருந்தே இந்தப் பிரச்சனை இருப்பின் (Lifelong PE), உடலுறவில் ஈடுபட்ட 1 நிமிடத்திற்குள் விந்து வெளியேறுவது; அல்லது வாழ்க்கையின் இடையில் இந்தப் பிரச்சனை தோன்றியிருந்தால் (Acquired PE), உடலுறவில் ஈடுபட்ட 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவது, மேலும் விந்து வெளியேற்றத்தைத் தாமதப்படுத்த இயலாமை மற்றும் அதனால் மன உளைச்சல் ஏற்படுதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
இது ஏன் நிகழ்கிறது?
விரைவான விந்து வெளியேற்றம் எப்போதாவது ஏற்படலாம், ஆனால் அது தொடர்ந்து ஏற்பட்டால், அதற்குக் காரணமாக ஒரு அடிப்படைப் பிரச்சினை இருக்கலாம். சில ஆண்கள் முன்கூட்டியே விந்து வெளியேறுதலை (PE) அனுபவிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
இப்பிரச்சினையை சரிசெய்ய உதவுபவை எவை?
இப்பிரச்சனை மிகுந்த மனவேதனையைத் தந்தாலும், சிகிச்சை, பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலம் இதைப் பயனுள்ள முறையில் கையாள முடியும்.
பயன்படுத்தப்படும் நுட்பங்கள்:
சிகிச்சை முறைகள் (Therapy):
பாலியல் சிகிச்சை மற்றும் CBT: இது உடலுறவு சார்ந்த பதற்றத்தைக் குறைத்து தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
தம்பதிகளுக்கான ஆலோசனை (Couples counselling): இது தம்பதிகளுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவித்து உறவுச் சிக்கல்களைக் குறைக்கவும் உதவும்.
மருந்துகள்:
மருத்துவ ஆலோசனைக்குப் பின், உணர்வை மழுங்கச் செய்யும் க்ரீம்கள் அல்லது ஸ்ப்ரேக்கள் (lidocaine or prilocaine உள்ளடக்கியவை), மன அழுத்தத்திற்கான எதிர்ப்பு மருந்துகள் (selective serotonin reuptake inhibitors போன்றவை) மற்றும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் (sildenafil) என்பன முன்கூட்டிய விந்து வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
தவறாமல் உடற்பயிற்சி செய்தல், சீரான உணவு பழக்கவழக்கம், மது மற்றும் புகைப்பிடித்தலைக் குறைத்தல் மற்றும் மன அழுத்தத்தை சரியாக கையாளுதல் ஆகியவை சிறந்த பாலியல் செயல்பாட்டிற்கு உதவும்.
முன்கூட்டிய விந்து வெளியேற்றம் என்பது மிகவும் பொதுவானது. இது உறவுகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், இதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்கு எளிய நுட்பங்கள் முதல் தொழில்முறை ஆலோசனை வரை, ஆண்கள் தங்கள் கட்டுப்பாட்டையும் நம்பிக்கையையும் மீண்டும் பெற பல வழிகள் உள்ளன. முன்கூட்டிய விந்து வெளியேற்றம் அடிக்கடி ஏற்பட்டு, அது மன உளைச்சலைத் தந்தால், ஒரு சுகாதார வைத்தியரை அணுகுவதே சிறந்த நடவடிக்கையாகும். அவர் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சையை வடிவமைப்பார்.
பாலியல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு பகுதியாகும். மேலும், முன்கூட்டிய விந்து வெளியேற்றம் போன்ற சிக்கல்களை கையாள்வதன் மூலம் அதிக திருப்திகரமான மற்றும் நெருக்கமான உறவை ஏற்படுத்தலாம்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ முன்கூட்டிய விந்து வெளியேற்றம் இருந்தாலோ அல்லது பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஏதேனும் கவலைகள் இருந்தாலோ, கட்டாயமாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஒரு சுகாதார நிபுணரிடமிருந்து மேலதிக மருத்துவ ஆலோசனையைப் பெற, இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் புளூம் மருத்துவ மையத்தை(Bloom Medical Clinic), +94 779895252 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, 37/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு-07 என்ற முகவரியினூடாகவோ தொடர்பு கொள்ளவும்.
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்டமிடல் சங்கம்