STIS DESCRIPTION | The Family Planning Association of Sri Lanka

STIS DESCRIPTION

In this section :

1. கிளமிடியா

2. பிறப்புறுப்பு ஹெர்ப்ஸ்

3. கோனோரியா

4. சிபிலிஸ்

5. எச்.ஐ.வி

6. HPV

 

1. கிளமிடியா


 

கிளமிடியா என்பது நுண்ணுயிர் கொல்லிகளால் குணப்படுத்தக்கூடிய ஒரு பொதுவான பாக்டீரியா தொற்றாகும். மக்கள் சில நேரங்களில் அறிகுறிகளை அனுபவிக்கலாம் என்றாலும், இது பெரும்பாலும் ஒரு வைத்தியரை பார்க்கச் செல்லுகின்ற அளவுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டாத .ஒரு "அமைதியானதொற்று" ஆகும். இதனால் தான் எங்களுக்கு ஒரு புதிய கூட்டாளர்(கள்) இருக்கின்ற பொழுது தவறாமல் பரிசோதிக்கப்படுவது முக்கியமாக இருக்கின்றது. உங்களுக்கு வாய்வழி மற்றும்/அல்லது குத உடலுறவுவைத்துக் கொள்ள வேண்டுமானால் தொண்டை மற்றும்/அல்லது குத துடைப்பை கேட்பதை நினைவில் கொள்ளுங்கள்,  ஏனென்றால் தொண்டை மற்றும் மலக் குடலிலும் கிளமிடியா ஏற்படலாம்.

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கருவுறாமைக்கு/மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

 

2. பிறப்புறுப்பு ஹெர்ப்ஸ்


 

பிறப்புறுப்பு ஹெர்ப்ஸ் என்பது பிறப்புறுப்புகளில் மற்றும் அவற்றை சுற்றி அவ்வப்போது தோன்றுகின்ற வலியான புண்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொதுவான வைரஸ் தொற்றாகும். ஹெர்பெஸ் தோல்-முதல்-தோல் தொடர்பு மூலம் பரப்பப்படுகின்றது.

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டவுடன், வைரஸானது வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும், ஆனால் அறிகுறிகளை சமாளிக்கமுடியும். ஆரம்ப நோய்த்தொற்றுக்கு பிறகு, இது கவனிக்கத்தக்கதாகவோ அல்லது தெரியாமலோ இருக்கலாம்.  (மற்றவர்கள் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்காமல் இருக்கின்ற பொழுது, சிலருக்கு இது வலிமிகுந்த புண்கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு  வழிவகுக்கலாம்)

 

3. கோனோரியா

 

கோனோரியா என்பது நுண்ணுயிர்கொல்லிகளால் குணப்படுத்தக்கூடிய ஒரு பொதுவான பாக்டீரியா தொற்றாகும். சிறுநீர்கழிக்கின்ற பொழுது ஏற்படுகின்ற எரிச்சல், உடலுறவின்பொழுது ஏற்படுகின்ற வலி மற்றும்/அல்லது ஆணுறுப்பு அல்லது யோனியில் இருந்து வெளியேறுகின்ற அசாதாரணமான வெளியேற்றம் போன்றவை மிகவும் பொதுவான சில அறிகுறிகளாக இருக்கின்றன. சிலருக்கு மாதகணக்காக எந்த அறிகுறிகளும் இருக்காது.

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கருவுறாமைக்கு/ மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்

 

4. சிபிலிஸ்


 

சிபிலிஸ் என்பது தொற்றும் நிலைகளின் பொழுது பிறப்புறுப்புகளின் அல்லது வாயின் அருகே ஒரு திறந்த புண் அல்லது புண்கள் மறைந்த பிறகு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய ஒரு சொறிமூலமாக கடத்தப்படுகின்ற ஒரு பாக்டீரியா தொற்றாகும். சில வேளைகளில் வலி இல்லாததால் புண்கள் கவனிக்கப்படாமல் போகும். ஒரு கிளினிக்கில்/ மருத்துவகூடத்தில் கொடுக்கப்படுகின்ற ஒரு தொடர் ஊசிகளின் மூலம் சிபிலிஸ் சிகிச்சையளிக்கப்பட மற்றும் குணப்படுத்தப்பட முடியும்; எவ்வாறாயினும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சிபிலிஸ் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

 

5. எச்.ஐ.வி

 

எச்.ஐ.வி என்பது மனித நோயெதிர்ப்பு குறைபாட்டு வைரஸை குறிக்கின்றது. எச்.ஐ.வி உடலில் பரவி,நோயெதிர்ப்பு மண்டலத்தை குறிவைத்து,நோய்களை எதிர்த்து போராடுவதை உடலுக்கு கடினமாக்குகின்றது.

எச்.ஐ.வி என்பது பாதுகாப்பற்ற உடலுறவு மூலமும் (யோனி, குத மற்றும் வாய்வழி) அல்லது எச்.ஐ.வி- நேரான ஒருவருடன் போதை மருந்து ஊசி உபகரணங்களை (ஊசிகள் போன்றவை) பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவக்ககூடிய ஒரு வைரஸாக இருக்கின்றது.எச்.ஐ.வி வைரஸ் இரத்தம், விந்து, குத மற்றும் யோனிசுரப்புகள் போன்ற உடலியல் திரவங்களிலும் இருக்கின்றது. .

எச்.ஐ.வி.க்கு அறியப்பட்ட சிகிச்சை எதுவுமில்லை, ஆனால் அதை குணப்படுத்த முடியும். எச்.ஐ.வி- நேராக உள்ளவர்கள் வைரஸை நிர்வகிக்கின்ற பொழுது நீண்ட, முழு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

 

6. மனித பாபில்லோமா வைரஸ்(HPV)

 

மனித பாப்பிலோமா வைரஸ்(HPV) என்பது மிகவும் பொதுவான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்த் தொற்றாகும், HPV ஆனது எந்த வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாவிட்டாலும் வைரஸை கொண்டு செல்லுகின்ற ஒரு வருடனான தோல்-முதல்-தோல் தொடர்பு மூலம் பரப்பப்படுகின்றது. சில விகாரங்கள் மருக்களை அகற்றுவதற்காக உறைதல் அல்லது லேசர் செய்தல் போன்ற பல்வேறு முறைகளால் சிகிச்சையளிக்கப்படக்கூடிய பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்துகின்றன. HPV இன் பிற வடிவங்கள் காலப்போக்கில் கருப்பைவாய் அல்லது குத புற்றுநோயை உருவாக்கக்கூடிய கருப்பைவாயில் அல்லது மலக்குடலிலுள்ள அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கின்றவர்களுக்கும் (அல்லது இருந்தவர்களுக்கும்) அத்தோடு கருப்பைவாய் மற்றும்/அல்லது குத உடலுறவு வைத்திருக்கின்றவர்களுக்கும் அசாதாரணமான உயிரணுக்களை திரையிடுவதற்கு வழக்கமான பாப்பரி சோதனைகளை பெறுவது முக்கியமானதாகும். சில வகையான HPVகள் தடுப்பூசி மூலம் தடுக்கப்படலாம்.

 

STI பரிசோதனைகிளினிக்குகள் - அழையுங்கள்மற்றும்ஒரு முன்பதிவுசெய்யுங்கள்

எவ்(f) பி ஏ ஸ்ரீலங்கா – 0779552979
என் எஸ் ஏ சி பி (NSACP - 0112667163

 


Learn More About:

 


How Do I talk with my Partner about STI

STD- Get Tested

STIS Description

Subscribe to Get the Latest News From Us

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By